நாத்திகம் பேசுவோர் தமிழர்கள் இல்லை: இலங்கை எம்.பி.யோகேஸ்வரன் காட்டம்

”நாத்திகம் பேசுவோர், ‘தமிழர்கள்’ எனக் கூற அருகதையற்றோர்,” என, இலங்கை எம்.பி., யோகேஸ்வரன் பேசினார்.

இலங்கையின் ஆன்மிகத்திற்கு, அஸ்திவாரமிட்டது, தமிழகம். ஆறுமுக நாவலர், திருமூலர் ஆகியோர், இலங்கையை, ‘சிவபூமி’ என்றழைத்தனர். விநாயகர் சதுர்த்தி விழா, மதம், இனம் ரீதியாக ஒன்றுபடும் நிகழ்வாக உள்ளது.

இலங்கையில் இருப்பவர்கள், ஹிந்து மதத்தில் பற்றோடு உள்ளோம். சைவம் என்றால், தமிழ். தமிழர்என்றால், சைவர்கள்.தமிழகத்தில் நாத்திகம் பேசுவோர், ‘தமிழர்’ எனக் கூற, அருகதையற்றோர். தமிழகத்தில், ஹிந்து மதம் தழைத்தோங்க வேண்டும் என்று நேற்று தேனி விநாயகர் சதுர்த்தி விழாவில் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *