நமஷ்தேக்கு வழிவகுத்த கொரானா வைரஸ்

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் யாரையாவது வரவேற்க வேண்டும் என்றால், அவர்களைக் கட்டியணைத்து, முத்தம் கொடுத்து அல்லது கைகுலுக்கி மரியாதையுடன் வரவேற்பார்கள். ஆனால், உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் நோய் பரவியிருப்பதால், கைகுலுக்குவது உள்ளிட்ட மரபுகளை மக்கள் கைவிட்டு இந்திய பாணியில் “நமஸ்தே’ என்று சொல்லி வரவேற்க ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமல்லாமல், முக்கியப் பிரமுகர்களிடம் சற்று தள்ளி நின்றே பழக ஆரம்பித்துள்ளனர்.
உலக நாடுகளின் தலைவர்களும், இதர பிரமுகர்களும் ஒருவரைச் சந்திக்கும் போது இரண்டு கைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டு “நமஸ்தே’, “ஹலோ”, “ஹாய்’, “எப்படி இருக்கிறீர்கள்’ என்று இந்திய பாணியில் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். “நமஸ்தே’ என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் இருந்து உருவானது. அதாவது “நமஸ் – தே’ என்பது “நான் உங்களை வணங்குகிறேன்’ என்று பொருள்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கரை வரவேற்கும் போது “நமஸ்தே’ என்று கூறித்தான் வரவேற்றாராம். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், ஒரு முக்கியப் பிரமுகரை வரவேற்கும் போது கைகுலுக்க முனைந்தவர், திடீரென்று கைகளை விலக்கிக் கொண்டு கைகளை ஒன்று சேர்த்து “நமஸ்தே’ என்று கூறினார். இதே பாணியைத்தான் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் மன்னர் பிலிப்பை வரவேற்கும் போதும் பின்பற்றியுள்ளார். இதேபோல், இஸ்ரேல் நாட்டு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவும் “நமஸ்தே’ கூற தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினர்.