தொடருது ஹிந்துமத துவேஷம்… தீர்வு தேடுது நம் சமுதாயம்

உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் உற்பத்தியாகும் பாரதப் புழை கேரளத்தின் இரண்டாவது பெரிய நதி. திருமூர்த்தி மலையிலிருந்து புனித நீர் எடுத்து மகாமேரு எனப்படும் பீடத்தில் அமர்த்தி, கேரள மகாமக தலம் நோக்கி ஒரு ரதயாத்திரை தொடங்கியது. தமிழகத்தின் 30 ஊர்களில் இந்த மகாமக ரதத்திற்கு வரவேற்பு ஏற்பாடு விறுவிறுப்பாக தொடங்கியது. தமிழகத்தில் நடப்பது நாத்திக ஹிந்து விரோத தர்பார்; ஹிந்துக்கள் ஒன்றுபட்டு விடுவார்களோ என்ற பீதியில் தமிழக போலீஸ் அந்த பீடத்தை வேறு ஒரு வண்டியில் ஏற்றி நேரே கேரளா எல்லைக்குள் கொண்டு போய் சேர்த்து விட்டது. நிகழ்ச்சியைத் தடை செய்த காரணம் சொல்லப்படவில்லை. இது போல ஹிந்துக்களுக்கு எதிராக திமுக செய்யும் பல்வேறு வகையான இன்னல்களை நமக்கு தொகுத்து அளித்துள்ளார் பிரபல எழுத்தாளர் பா. பிரபாகரன்

 

திமுக என்ற வக்கிரத்திற்கு பல முகங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒரு முகம் ஹிந்து மத துவேஷம். கடவுள் இல்லை என்று சொல்லும் போது கூட எந்தக் கடவுள் மட்டும் இல்லை? என்று சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக ஆராய்ந்து ஹிந்து கடவுள்களை மட்டும் கடவுள் மறுப்பு பேசும் அராஜக கூட்டம் தான் திமுக மற்றும் தி.க.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி “சனாதன ஒழிப்பு” மாநாட்டில் அப்போதைய அமைச்சரும், தற்போதைய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், “டெங்கு, கொரோனாவைப் போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் அகில பாரத நிர்வாகி அமித் மாளவியா, தனது எக்ஸ் தளத்தில் அவரது கருத்தை பகிர்ந்தார்.

அவர் மீது திமுக பிரமுகர் போலீசில் புகார் அளித்ததால், அமித் மாளவியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, “வெறுப்பு பேச்சை தொடங்குபவர்கள், எந்த தண்டனையும் இன்றி விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றுபவர்கள் மட்டுமே சட்டத்தின் கோபத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை வேதனையுடன் பதிவிட்டார்.

தமிழகத்தில் நூறாண்டுகளாக திராவிடர் கழகம், திமுக ஆகியவை ஹிந்துக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஹிந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அந்த கட்சியை சேர்ந்தவர்களே தமிழக அமைச்சர்களாக உள்ளனர். இந்த வழக்கில் தமிழக அமைச்சர் மீது அவரது வெறுப்பு பேச்சுக்காக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் மகாத்மா காந்தி, காமராஜர், ராமானுஜர், புத்தர், வள்ளலார், ஈவேரா போன்றோர் சனாதனத்துக்கு எதிரானவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈவேரா தவிர வேறு யாரும் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசவில்லை. எனவே அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவிலும் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விசாரணை அதிகாரியின் பதில் மனுவில் அரசியல் சாயம் இடம்பெற்று இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதிகாரிகள் அரசியல் சார்பு அற்றவர்களாகவே இருக்க வேண்டும் எனக் கூறி, அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்தார். இந்த வழக்கில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், உதயநிதியின் பேச்சுக்கு எதிராக நீதிபதி தெரிவித்த தீர்ப்பு.


கருப்பசாமி, அய்யனார், முருகன், மாரியம்மன் என்ற தெய்வங்களை எல்லாம் நிந்தித்தால் உறுதியாக உதை விழும் என்று தெரிந்துகொண்ட திமுகவினர், சிறுபான்மையினரான பிராமண சமூகத்தில், இன்னும் சிறுபான்மையாக இருக்கும் ஐயங்கார் சமூகம் சார்ந்த காஞ்சி அத்திவரதர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் விஷயத்தில் மட்டும் தங்களின் வீரத்தை காட்டக்கூடியவர்கள்.

கருணாநிதிக்கு தன்னுடைய எல்லை எதுவரை என்று தெரியும். ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்று ஆவேசமாக கேட்டுவிட்டு, அடுத்த கணமே வாஜ்பாய் மிகவும் நல்ல மனிதர் என்று பாராட்டவும் தெரிந்திருந்தது.

ஆனால் இன்றைய திராவிட குஞ்சுகளுக்கு அவர்களின் எல்லை என்பது மறந்து விட்டது. ஆகையால் இந்த ஆட்சியில் ஐந்து வருடங்களாக ஹிந்து துவேஷம் செய்யும் அட்டூழியம், எல்லா எல்லைகளையும் கடந்து, எல்லா தரப்பு மக்களும் முகம் சுளிக்கும் வகையில் நடக்கிறார்கள்.

200க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்களை இடித்துவிட்டு, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து விட்டோம் என மார்தட்டிக் கொள்வதில் தலைசிறந்த அமைச்சர் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

இடிக்கப்பட்ட ஹிந்து கோயில்கள் மக்களுக்கு இடையூறாக இருந்ததா? பட்டா இல்லாமல் புறம்போக்கு நிலத்தில் இருந்ததா? அல்லது பட்டா நிலத்திலிருந்ததா? வேறு யாரேனும் அந்த நிலத்தில் கோயில் இருப்பிற்கு ஆட்சேபம் தெரிவித்தார்களா? இதைப் பற்றி எல்லாம் எந்த விளக்கமும் இதுவரை தெளிவாக தரவே இல்லை.

ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்களை ஒரு லட்சம் ஏக்கர் மீட்டெடுத்தோம். இரண்டு லட்சம் ஏக்கர் மீட்டெடுத்தோம் என சேகர்பாபு சொல்லும் தகவல்கள் எங்கும் காகிதத்தில் கூட காணவில்லை. வெறும் செய்தியாக மட்டுமே உள்ளது.

திருவண்ணாமலையிலும், இதர இடங்களிலும் இருக்கும் கொஞ்ச நஞ்ச இடத்தையும் கட்டிடங்களாக மாற்றுவதில் தான் இந்த திமுக அரசு குறியாக இருக்கிறது. அவ்வளவு ஹிந்து விரோதம்.


கந்த சஷ்டி கவசத்தை ஒருவன் இழிவு படுத்தி விட்டான் என்றால், அது பேச்சு சுதந்திரம். அதை தட்டிக் கேட்க திமுகவில் யாருக்கும் திராணி இல்லை. மற்ற மதங்களைப் பற்றி யாரேனும் ஒரு சிறு ட்விட்டர் பதிவு போட்டால் கூட, அடுத்த நிமிடம் குண்டர் சட்டம் பாய்கிறது.

“ஹிந்துவாகப் பிறந்தவன் வேசியின் மகனாகவே இருக்கிறான், ஹிந்து மதத்தில் நீ இருக்கும் வரை நீ வேசி மகனாகவே கருதப்படுவாய், நான் ஹிந்து மதத்தில் இருந்து வெளியேறி விட்டேன், நீங்களும் வெளியேறி விடுங்கள்” என்று ஹிந்து விரோத அறைகூவல் விடுத்த ஆண்டிமுத்து ராசா இன்று வரை கேட்பார் இல்லாமல் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான். இதுதான் திராவிட செக்யூலரிசம்.

தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல வாய் வராத திராவிட கூட்டம், தங்களது தொலைக்காட்சி அலைவரிசைகளை மட்டும் கண்டு கொள்வதில்லை. தீபாவளி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகள் வந்தால் போதும், திராவிட குடும்பம் சார்ந்த அவர்களின் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளும், சிறப்பு பட்டிமன்றம் என்ற போர்வையில் நிரந்தரமான ஒரு நாடக கும்பலை வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில், முதல் முறையாக என்ற அடைமொழியோடு வரும் திரைப்படங்கள், இது எல்லாம் எதற்காக? தீபாவளிக்காக.!

ஏன்? அவர்களின் பெரியார் ஈ.வே. ராமசாமியின் பிறந்த நாளில் இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் நிகழ்த்திக் காட்டலாம் தானே?

வள்ளலாருக்கு விழா எடுக்கிறேன் என்று கிளம்பினார்கள். ஆனால் கடைசியில் வள்ளலாரின் நெற்றியில் இருந்த விபூதி அடையாளத்தை எடுத்தது தான் மிச்சம். 200 கோடி ரூபாய் போன இடம் தெரியவில்லை. வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவிற்காக அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று பேசும் போதே இவர்களின் கபட நாடகம் தெளிவாகப் புரிகிறது. ஆனால் 200 கோடி ரூபாய் எங்கே போனது? என்பதற்கு மட்டும் இதுவரை பதில் இல்லை.

எங்க அப்பாவும் கச்சேரிக்கு போகிறார் என்ற பாணியில் தேவை இருக்கிறதோ? இல்லையோ! உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மேல் முறையீடு செய்வதை பெருமையாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

சன் டிவிக்கு ஒரு சாலமன் பாப்பையா கும்பல் என்றால், சேகர் பாபுவிற்கு சுகிசிவம் கும்பல். வாங்கும் காசிற்கு வஞ்சனை இல்லாமல் கூத்தாடுகிறார்கள்!


பழனி மலையில் இருப்பது முருகன் அல்ல. முருகன் வேறு, சுப்பிரமணியன் வேறு, பெருமாள் வேறு, விஷ்ணு வேறு, இதெல்லாம் அவரின் வாயிலிருந்து விழுந்த ஞான கொழுந்துகள். முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையே “சிக்கந்தர் மலை” என்ற பிரச்சினை வந்தபோது, வாரி சுருட்டிக்கொண்டு சேகர்பாபு வக்காலத்து வாங்கினார். ஏன்? பேசாமல் அதை “கலைஞர் மலை” என்று பெயர் சூட்டி விடலாமா?

மசூதிக்குள் பூண்டு, வெங்காயம், மாமிசம் சாப்பிடக்கூடாது என்று நபிகள் நாயகம் கூறுகிறார். ஆனால் இங்குள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பிரியாணி வாங்கிக் கொடுத்து, மலை முழுவதும் உட்கார்ந்து உண்ண வைத்து அழகு பார்க்கிறார். கேட்பாரற்று கிடக்கிறது இந்த அரசு. ஓசி பிரியாணி என்றால் அரசும் வாய் மூடிக்கொள்ளுமா?

முதலில் யார் இந்த சிக்கந்தர்? பாண்டிய மன்னர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்ட ஒரு மனிதன். எப்படி ஞானி ஆனான்? இதுதான் திராவிட வரலாறு. யாரும் கேள்வி கேட்க முடியாது. சரி போகட்டும். கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் ஏற்றலாமா? கூடாதா? ஒரு நீதிபதி ஏற்றலாம் என்றார். டிவிஷன் பெஞ்ச் ஏற்றலாம் என்றது. உச்ச நீதிமன்றமும் தீபம் ஏற்ற அனுமதித்தது. ஆனால் இன்னும் தீபத்தை மட்டும் காணவில்லை.

ஒருவேளை ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ஏற்றலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்களோ? என்னவோ!
இதற்கெல்லாம் என்ன காரணம்? நாம் தான் காரணம். கணிசமான இஸ்லாமிய, கிறிஸ்தவ, சிறுபான்மை வாக்கு வங்கி திமுகவிடம் இருக்கிறது. ஏமாந்து போன இளிச்சவாய ஹிந்துக்கள் எப்படியும் நமக்கு ஓட்டு போடத்தான் போகிறார்கள்! என்ற அசைக்க முடியாத ஆணவம்தான், திமுகவை இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஹிந்து துவேஷம் செய்ய வைக்கிறது.
தீர்வு நம்மிடம் தான் இருக்கிறது.

எந்தக் கோயிலை இடித்தால் நமக்கென்ன? பகவான் கோயிலில் மட்டுமா இருக்கிறார்? எல்லா இடங்களிலும் தான் இருக்கிறார் என்று நம் இயலாமைக்கு நமக்கு நாமே ஆறுதல் சொல்லி கொள்ளும் மடமையும், நாமெல்லாம் படித்தவர்கள் அவர்களைப் போல் வீதியில் இறங்கி சண்டை போடக்கூடாது என்று நம் கோழைத்தனத்தை பூசி மெழுகும் மனநிலையுமே இதற்கு காரணம். தீர்வு ஹிந்துக்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது.

ஓடப்பராயிருக்கும் ஹிந்து பக்தர் கூட்டம், உடையப்பர் ஆகிவிட்டால், ஓர் நொடிக்குள் பொடியப்பர் ஆகிவிடும், இந்த திராவிட கூட்டம்!