”தேசியவாதம்” என்ற சொல்லை தவிர்க்கவும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

அடால்ப் ஹிட்லரின் நாசிச கொள்கையை நினைவு படுத்துவதால் தேசியவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

தேசியவாதம் எனும் வார்த்தை முற்றிலும் வித்தியாசமான வார்த்தை. ஆனால், சிலர் நாசிசம் மற்றும் பாசிசத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். நான் இங்கிலாந்துக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் என்னிடம் வந்து சில அறிவுரைகளை எனக்கு வழங்கினார்.

அதாவது இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் ‘நேஷனலிஸம்’ (தேசியவாதம்) என்ற வார்த்தையை இங்குப் பயன்படுத்தாதீர்கள். இங்கு நேஷனலிஸம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் வேறுமாதிரி இருக்கிறது என்று அறிவுறுத்தினார். ஏனெனில், அந்நாட்டில் தேசியவாதம்  என்ற சொல் ஹிட்லர், நாசிசம், பாசிசம் ஆகியவற்றை குறிப்பதாக தெரிவித்தார். எனவே தேசியவாதம் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த சொல் ஹிட்லரின் நாசி கொள்கையை மக்களிடையே நினைவுபடுத்துகிறது .

அடிப்படைவாதம் காரணமாக நாடு முழுவதும் அமைதியின்மை நிலவுகிறது. இருப்பினும், பன்முகத்தன்மை  காரணமாக ஒவ்வொரு இந்தியரும் இணைக்கப்படுகின்றனர். யாரையும் அடிமையாக வைத்திருக்க மாட்டோம், யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டோம் என்பதுதான் இந்தியாவின் கொள்கையாகும். அனைவரையும் ஒருங்கிணைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. இந்திய கலாச்சாரம் என்பது இந்து கலாச்சாரம்தான்”  என்றார்.