தேசவிரோத பேராயங்கள்

ராஞ்சி கத்தோலிக மறைமாவட்ட பேராயம், ரூ. 62 கோடி எப்.சி.ஆர்.ஏ விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக மாவோயிஸ்ட்டுகளை வெளிப்படையாக ஆதரிப்பது, பணத்திற்காக குழந்தைகளை விற்ற கன்னியாஸ்திரிகளை பாதுகாத்தது, மாவோயிச பாதிரி ஸ்டேன் சுவாமியை பாதுகாத்தது போன்ற தேசவிரோத நடவடிக்கைகளில் இந்த கிறிஸ்தவ அமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு குழந்தைகளை விற்பனை செய்வதன் மூலமும் நிதி திரட்டியுள்ளது. பழங்குடியினர்களை மதம் மாற்றுவது, ஹிந்துக்களை பிரிப்பது, இட ஒதுக்கீட்டின் பலன்களை முறைகேடாக பெறுவது போன்றவை இந்த அமைப்பின் நிகழ்ச்சி நிரல்களில் சில என ‘சட்ட உரிமைகள் ஆய்வகம்’ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளதுடன் இது குறித்த ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே ஜார்கண்டை சேர்ந்த ‘கல்வாரி நற்செய்தி அமைச்சகம்’ எனும் கிறிஸ்தவ அமைப்பு 90 கோடி முறைகேடுகளில் ஈடுபட்டதையும், பழங்குடியினரை கட்டாய மதமாற்றம் செய்ததையும் இந்த அமைப்பு வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.