குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜே.என்.யூ வில் நடத்த போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்தவர்கள் யார் என்பதை ஊடகங்கள் நன்கறியும். தொலைக்காட்சியில் காட்டப்படும் செய்தியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வன்முறையையும், அதற்கு ஆதரவாக காங்கிரஸ், மம்தா, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினர் பின்புறத்தில் உள்ளார்கள் என்பதும் உண்மையாகும். முகமூடி அணிந்து பல்கலைகழகத்தின் உள்ளே மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். இந்த தாக்குதலில் ஏ.பி.வி.பி. ஈடுபட்டதாக தமிழ் இந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இடதுசாரி மாணவ அமைப்பினரின் வீடியோவை காட்டாமல், ஒரு குறிப்பிட்ட பிரிவினைரின் கருத்தை மட்டும் செய்தியாக ஒலிபரப்பபடுவது அப்பட்டமான பொய்யானது மட்டுமில்லாமல், தனது எஜமான விசுவாசத்தை காட்டும் விதமாக செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் கூடாரமாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருக்கும் மாணவர் அமைப்பு இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் SFI மாணவர் அமைப்பாகும். 5.1.2020-ல் நடந்த கலவரத்திற்கு ஏ.பி.வி.பி.யின் மீது குற்றம் சுமத்தும் இடதுசாரி மாணவர்கள் அமைப்பின் தலைவர்கள், . டெல்லி ஜே.என்.யூ. வில் நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றை கவனித்தால், வன்முறையாளர்கள் யார் என்பது தெளிவாக புரியும். இடதுசாரி மாணவர் அமைப்பினரின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பதற்கு, டெல்லியில் சமூக ஆர்வலர் கோபால் பிரசாத், தகவல் உரிமை சட்டத்தில், சில கேள்விகளை எழுப்பினார். அவருக்கு பதில் அளித்த ஜே.என்.யூ. மக்கள் தொடர்பாளர் கொடுத்த பதிலில், சட்டத்தை மீறும் மாணவர்களே அதிக அளவில் உள்ளார்கள். மாதம் ஒன்றுக்கு ஏழு மாணவர்களுக்கு மேல் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகிறார்கள். இவ்வாறு ஒழுங்கு நடவடிககை்கு உள்ளாகும் மாணவர்கள் இடதுசாரி அமைப்பின் மாணவர் பிரிவு என குறிப்பிட்டுள்ளார்.
அவர் கொடுத்துள்ள பட்டியலில் உள்ளவர்கள். கன்னயாகுமார, சயீத் உமர் கலீத், முஜீப் கட்டூ, அபராஜிதா போன்றவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, சில நாட்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைக் கூடாது என தடை விதிக்கப்பட்டவர்கள். அனிரபன் பட்டாச்சார்யா, திரௌபதி கோஷ், Banajyotsna Lahiri ஆகிய மூவரும் ஐந்தாண்டுகள் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைய கூடாது என தடை விதிக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர். அப்சல்குருக்கு தூக்கிலிட்ட பிப்ரவரி 9ந் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , இந்தியாவின் இறையான்மைக்கு எதிராக போராடிய 21 மாணவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தான் ஜே.என்.யூ.வில் இடதுசாரி மாணவர் அமைப்பினரின் லட்சணம். இவர்கள் ஏ.பி.வி.பி. யின் மாணவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.
5.1.2020ந் தேதி ஞாயிறு மாலை நடந்த கலவரத்திற்கு முன்பாக கல்வி கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவரகள் , 24 நவம்பர் மாதம் தேர்வுகளை புறக்கணிப்போம் என அறைகூவல் விடுத்தவர்கள் . தேர்வு எழுத வந்த மாணவர்களை அடித்து விரடடியடித்தவர்கள், ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என அறிவித்த போது பெருமளவில் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதை முறையடிக்க முகமூடி அணிந்து கொண்டு, சர்வரை நாசம் செய்தார்கள், பணியிலிருந்த ஊழியரகள் வெளியேற்றப்பட்ட வன்முறையில் ஈடுபட்டவர்கள் இடதுசாரி மாணவர் அமைப்பினர். அர்பன் நக்ஸல்கள் உருவாக்கும் இடமாகவும் இந்த பல்கலைகழகம் விளங்குகிறது.
இடதுசாரி மாணவர் அமைப்பின் கோஷமான Freedom, Democracy and Socialism என்பதை உதட்ளவில் வைத்துக் கொண்டவர்கள். இவர்களை பற்றி 25 ஆண்டுகள் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய டாக்டர் சி. மோலி மெர்சிலின், No Democracy, no freedom, in campus only Fascism என்றார். வன்முறையை வளர்ப்பதற்கு ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் ஊக்கம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். கேரள மாநிலத்தில் திருவணந்தபுரம் பல்கலைகழக கல்லூரி மாநிலத்தில் உள்ள எஸ்..ஐ.எஃப் க்கு தலைமையிடமாக செயல்படுகிறது. எனவே இக்கல்லூரியை செங்கோட்டை என பெயரிட்டு அழைக்கிறார்கள். கல்லூரியின் நிர்வாகத்தில் தலையீடும் அதிக அளவில் உள்ளதாக கல்லூரியில் பணியாற்றும் பேரராசிரியர்கள் தெரிவித்தார்கள். கல்லூரியில் நடக்கும் பேரவை தேர்தலில் எஸ்.எஃப்.ஐ.க்கு எதிராக யார் நின்றாலும், அவர்கள் தாக்கப்படுவதும், பல நேரங்களில் கொலையும் நடந்துள்ளது. தங்களின் இதழுக்கு சந்தா கட்டாத மாணவர்கள் கூட தாக்கப்பட்டுள்ளதாக பேரராசிரியர் பீனா தெரிவித்தார்.
, இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் வந்த பின்னர் தான், தேச விரோத செயல்பாடுகள் அதிக அளவில் உருவாகின. . 1999-ன் மத்தியில் கார்க்கில் யுத்தம் நடைபெற்ற போது, இடதுசாரி மாணவர்கள் ஜே.என்.யூ. வில் இந்தியா பாகிஸ்தான் முஸிரா ( India – Pakistan Mushaira ) என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள், அந்த நிகழ்ச்சியில் இந்தியாவையும், பாதுகாப்பு படை வீரர்களையும் கேவலமான முறையில் விமர்சனம் செய்தார்கள். இந்நிகழ்ச்சி நடந்து ஒரு வருடத்திற்குள் மீன்டும் 2010-ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவதே பகுதியில் நக்ஸல்களின் தாக்குதல்களில் 76 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டார்கள். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் இரவு நேர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டத்தற்கும், கொன்ற நக்ஸலுக்கும் வாழ்த்து கூறும் நிகழச்சியாக நடத்தப்பட்டது. இரண்டு தினங்கள் கழித்து நக்ஸல் ஆதரவாளரான அருந்ததி ராய், பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற நக்ஸலுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இது போன்ற தேச விரோத செயல்கள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை நடத்துவது ஜனநாயக மாணவர் யூனியன் ( டெமாக்ரடிக் ஸ்டுடேண்ட் யூனியன்) .
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் உள்ள இடதுசாரி மாணவர்களின் கோஷங்கள் “Afzal Guru, Maqbool Bhat zindabad!” “Kashmir ki azadi tak jung rahegi/ Bharat ki barbaadi tak jung rahegi (The war will be on till Kashmir is free/ The war will be on till India is ruined)!” “Jis Kashmir ko khoon se seencha, woh Kashmir humara hai (The Kashmir that they drenched in blood, that Kashmir is ours)!” “Hum kya maange—azaadi, bandooq se lenge azaadi” (What do we want—freedom, we will seize that freedom with guns)!” “Go India, go back!” “Indian Army murdabad!” இது பற்றி யாரும் வாய்திறப்பதில்லை.
நன்கானா சாகிப் குருத்வாரா தாக்குதல் – கடந்த வெள்ளிக் கிழமை இஸ்லாமிய கும்பல் ஒன்று பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப் குருத்வாரா மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் 2019 ஆகஸ்ட் மாதம் சீக்கிய பெண் ஜகஜீத் கௌர் என்பவரை கடத்தி, கட்டாயமாக இஸ்லாமிற்கு மத மாற்றம் செய்தார்கள். அதிலிருந்து நன்கான சாகிப்பில் பதற்றம் நிலவி வந்ததாக டான் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. மதம் மாறிய சீக்கிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட முகமது ஹூசைன் மீது வழக்கு தொடுக்கப்பட்டதால், ஒரு கும்பலுடன் முகமது ஹூசைன் சீக்கியரை மிரட்டியதாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, புகாரின் பேரில் முகமது ஹூசைன் கைது செய்யப்பட்டான். இதன் காரணமாக ஒரு இஸ்லாமிய நாட்டில், முஸ்லீம் ஒருவருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி இஸ்லாமிய கும்பல் வெள்ளிக்கிழமை குருத்வாரா மீதும், குருத்வாராவில் பிராத்தனையில் ஈடுபட்ட சீக்கியர்கள் மீதும் கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள், கூடிய விரைவில் குருத்வாராவை முழுவதும் அழித்து விட்டு குலாம்-இ-முஸ்தபா என பெயர் மாற்றம் செய்யப்படும் என கோஷமிட்டார்கள்.
நீலிக்கண்ணீர் வடிக்கும் இம்ரான் கான், பாகிஸ்தான் வரலாற்றில், இந்துக்கள், சீக்கியர்களை கடத்தி மத மாற்றம் செய்வதும், மத மாற மறுப்பவர்களை கொலை செய்வதும் வாடிக்கையான ஒன்றாகும். 1947-ல் சிறுபான்மையினரை பாதுகாப்பதாக உடன்பாட்டில் கையெழுத்திட்ட லியாகத் அலி கான் முதல் இம்ரான் கான் வரை இந்துக்களையும், சீக்கியர்களை கொல்வதும், கொடுமைப்படுத்துவதும் மாறவில்லை. சிந்து பகுதியில் பெருவாரியாக இருந்த இந்துகள் மற்றும் சீக்கியர்களின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவே , Muhajirs என்ற இஸ்லாமியர்களை அதிக அளவில் குடியேற்றம் செய்யப்பட்டது. இவர்களுடன் 1979-ல் ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் போது வெளியேறிய ஆப்கானியர்களையும் சிந்து பகுதியிலேயே குடியமர்த்தப்பட்டார்கள். இந்த செயல்பாடு இன்னும் தொடர்கதையாக மாறி வருகிறது.
கடந்த ஆண்டு கர்தார்பூர் வழித் தட விழாவிற்கு பின்னர், Tehreek-e-Labbaik Pakistan என்ற அமைப்பின் தலைவர் காசிம் ஹூசைன் ரிஸ்வி விடுத்த அறிக்கையில் Pak or pious in Islam. The dirty habits of Sikhs will not allowed here. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது பாகிஸ்தான் மாறவில்லை என்பதையே காட்டுகிறது. நாடு பிளவுப்பட்ட போது சுமார் 20,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்தார்கள். தற்போது இந்த எண்ணிக்கை வெறும் 8,000க்கும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு சீக்கியர்களின் எண்ணிக்கை குறைவானதற்கு முக்கியமான காரணம், கட்டாய மத மாற்றம் அல்லது கொல்லப்படுதல். அமைதி நிலவுவதாக கூறும் இம்ரான் கான், தாக்குதல் சம்பவம் நடந்த மறு தினம், பெஷhவரில் தனது திருமணத்திற்கு பொருள்கள் வாங்க சென்ற, ரவீந்தர் சிங் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
வழக்கம் போல், இந்திய திரு நாட்டில், ஆளும் மோடி அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து விட்டு, பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியாவும், ராகுல்காந்தியும் அறிக்கை விட்டு விட்டார்கள்.
தாக்குல் நடத்திய இஸ்லாமியர்கள் மீதும், பாகிஸ்தான் அரசின் மீதும், இம்ரான் கான் மீதும் கண்டனங்களை காங்கிரஸ் கட்சி தெரிவிக்கவில்லை. இம்ரான் கானை ஆரத்தழுவிய காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில அமைச்சர் நவஜோதி சித்து, வாய் திறக்க்வில்லை. மோடி ஆட்சி கவிழ்ந்தால் தான், பாகிஸ்தானுடன் நட்புறவு மலரும் என வாய் மலர்ந்த மணி சங்கர் அய்யர் எங்கே போனார் என தெரியவில்லை.