தேசத்தை காத்தல் செய்..

தடைகளை மீறி அக்டோபர் 2-ஆம் தேதி நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்திருக்கின்றனர், சில அமைப்பினர்கள். இவர்கள் ஏழு முனைகளில் தாக்குதல் நடத்த இருப்பதாக ஓபன் சோர்ஸ் உளவுத் தகவல்கள் குறிப்பிடுகின்றனவாம்!
1. கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகள், AISF, SFI, AISA, மேலும் AAP-உடன் தொடர்புடைய CYSS/மாணவர் பிரிவு. இவை அக்டோபர் 2-ஆம் தேதி முதல் வீதிகளில் இறங்குமாம்!
2. அரசியல் முனை. விஜயபாரதம் வாசகர்களுக்கு இதை விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
3. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட திமாகி நக்சல்கள். அறிவுஜீவி முன்னணி பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், நடிகர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஊடகச் செல்வாக்காளர்கள்.
4. நமது நாட்டில் பணியாற்றும் உலகு தழுவிய ஜிஹாத்திய அமைப்புகள்
5. விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள்.. மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக, இவர்கள் நடத்திய தொடர் போராட்டம், செங்கோட்டையை தாக்கும் அளவுக்கு சென்றதை நாம் நினைவு கூர்வது நல்லது.
6. மதமாற்றத்தில் ஈடுபடும் மிஷனரி அமைப்புகள். அவை சார்ந்த என்.ஜி.ஓக்கள்.
7. ‘தலித்’ என்ற போர்வையில் இயங்கும் சில ஜாதி அமைப்புகள்.
இந்த ஏழு முனைகளுக்குமான ஒருங்கிணைப்பு லண்டன், வாஷிங்டன் மற்றும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து நடத்தப்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் SIR பணியில் நீக்கப்பட்ட 13.1 கோடி வாக்காளர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும், 2025ன் வாக்காளர் பட்டியல்படி இனி வரும் தேர்தலில் நடத்தப்பட வேண்டும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வைக்கப்பட்டிருக்கும் நடைமுறைக்கு ஒவ்வாத கோரிக்கைகள்.
இது எப்படி சாத்தியமாகும்? இறந்து போன 2.8 கோடி வாக்காளர்கள், கண்டுபிடிக்கப்பட முடியாத 3 கோடி வாக்காளர்கள், இரட்டை பதிவு செய்த ஒரு கோடி வாக்காளர்கள். நிரந்தரமாக இடம் பெயர்ந்த 6.8 கோடி வாக்காளர்கள் 2014ல் பிரதமர் மோடி பொறுப்பு ஏற்று போது, ஆறு வயது சிறுவனாக இருந்தவருக்கு, இப்போது வயது 18 இருக்கலாம். தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை தேர்தல் ஆணையம் தான் தோற்கடித்தது, நமது அரசு நிறுவனங்கள் சரியில்லை என்ற வாதம் எளிதில் அந்த இளைஞர்களை உணர்ச்சிக்கு உள்ளாக்கி ஏமாற்ற வைக்கிறது. சதிவலை ஆழமானது நீளமானது. சர்வதேச வலைபின்னலில் இணைக்கப்பட்டது.
பாரதி தனது ஆத்திச்சூடியில் கூறிய ” தேசத்தை காத்தல் செய்” என்பதற்கு சரியான தருணம் இது. விழிப்புணர்வு நம் கையில். தேசம் நம் கையில். நாம் தவற விட்டு விடக்கூடாது!