திராவிட மாடல் சாலை

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அங்கு பல்வேறு சீரமைப்பு பணிகள் வேகமாக தற்பொழுது நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், வேலுார் வந்ததையொட்டி, இரவோடு இரவாக வேலூரில் பல இடங்களில், பழைய சாலைகளை முறைப்படி பெயர்த்தெடுக்காமல் தரமற்ற திராவிட மாடல் சாலை அவசரகதியில் போடப்பட்டது. மெயின் பஜார் அருகே காளிகாம்பாள் கோயில் தெருவில், சிவா என்பவர் கடை முன் நிறுத்தியிருந்த பைக்குடன் சிமென்ட் சாலை போடப்பட்டது. இதுகுறித்த புகாரையடுத்து அவசர அவசரமாக, சிமெண்ட் கலவையை உடைத்து பைக்கை எடுத்தனர். அதேபோல, பொன்னியம்மன் கோயில் தெருவில், ஒரு மாதத்திற்கு முன், பழுதடைந்த அரசு ஜீப் மீது தார் சாலை போடப்பட்டது. புகாருக்குப்பின் கிரேன் மூலம் ஜீப் அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் தார் சாலை போடப்பட்டது. இந்த சூழலில், பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தருவதையொட்டி அதேபோல ஒரு அவசரகதி திராவிட மாடல் சாலை போடப்பட்டுள்ளது. தான்தோன்றி மலைக்கு உட்பட்ட ரியல் கோச் பகுதியில் சாலைகள் போடப்பட்ட இச்சாலைகள் தரமற்று இருந்ததால் தனியார் பேருந்து ஒன்று இச்சாலையில் சிக்கி கொண்டது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.