திண்டுக்கல் மலையில் உள்ள அபிராமி அம்மன் கோயிலில் பல நூற்றாண்டுகளாக அபிராமி அம்மனை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். கொடுங்கோல் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பால் பல கோயில்களை போல இங்கும் வழிபாடு தடைப்பட்டது. அங்கு மீண்டும் அபிராமி அம்மன் சிலையை ஸ்தாபித்து மக்கள் வழிபாடு செய்ய மத்திய மாநில அரசுகள் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஹிந்து முன்னணியின் காடேஸ்வரா.சி. சுப்ரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.