கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை மிரட்டிவந்த ரோவர் புயல் கடலூருக்கும் மரக்கணத்திற்கும் இடையில் கரையை கடந்தது. அதன் விளைவாகதமிழகத்தின் 16 மாவட்டங்களில் பெய்த பலத்த . மழையின் காரணமாக குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது பல்வேறு நீர் நிலைகளும் ஆறு குளங்களும் நிரம்பிவழிகின்றன குறிப்பாக சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழை நீரால் நீரால் சூழளப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் பல்வேறு துயரங்களுடன் அல்லல்படுகின்றனர் அரசு தனது பங்கிற்கு பொதுமக்களை பள்ளிகள் , முகாம்களில் தங்கவைத்து பாதுகாக்கிறது பொதுமக்களாகிய நமக்கும் இந்த இக்கட்டான வேளையில் மிகப்பெரிய பணி இருக்கிறது .நாம் நமது நண்பர்கள் உறவினர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர உதவவேண்டும். இந்த விஷயத்தில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவேண்டும் என்பதே நமது வேண்டுகோள். ஏற்கனவே ஆர் எஸ் எஸ் ,சேவாபாரதி அன்பர்களும் தொண்டுள்ளம் கொண்டநண்பர்கள் பலர் சேவைமனப்பான்மையுடன் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு இந்த பணியில் நாமும் இணைவோம். பொதுமக்களின் துயர் துடைத்து மக்கள் சேவையில் மகேசனுக்கும் தொண்டு புரிவோம்.