தமிழக கோயில் சொத்துக்கள் பத்தாயிரம் (10,000)கோடி கொள்ளை – ஆவணங்களை திருத்தி தனிநபர்களின் பெயரில்பத்திரப்பதிவு அம்பலம்

அறநிலைத்துறையின் சொத்து ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி அதனை பராமரிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டதும் இந்தவேலையை எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தி  ஒருவழியாய் வேலையே முடித்த  பின்னர்தான் அறநிலையத்துறையின் 25,868 ஏக்கர் நிலங்கள் அரசியல்வாதிகளால் ஏப்பம் விடப்பட்டுள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது . இந்த சொத்தின் மொத்த மதிப்பு சுமார் பத்தாயிரம் கோடிக்கு மேல் . இந்த சொத்துக்கள் எல்லாம் ஆளும் , ஆண்டகட்சிகளின் தலைவர்களால் ஆட்டயப்போடப்பட்டுள்ளது . அன்றாடம் காட்சிகளா ய்  அல்லக்கைகலாய்  இருந்த சில நபர்கள் சில ஆண்டுகளில் தொழில் அதிபர்களாகவும் கல்வி தந்தைகளாகவும் பெரும்பணக்காரர்களாகவும் ஆகிய விந்தையின் மூலம் என்ன என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது

  ஒரு வருடத்திற்கு முன்பு கோயில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலைமை வகிக்க சிறப்பு அதிகாரியாக ஐ. ஜி  பொன்மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டபோதும் , பா ஜ க தலைவர் எச் ராஜாஅறநிலையத்துறை செய்யும் வேலைக்கு  நேர்மையின்றி நடந்து கொண்டதாலேயே இந்த கொள்ளைகள் நடந்துள்ளது இது அவர்கள் செய்த பணிக்கு நம்பிக்கை  துரோகம். இத்தகையவர்கள்  தங்களின்  வீட்டு ………..  விற்பதற்கு தயங்காதவர்கள்  என்று பேசியதை அடுத்து ஆவேசத்துடன் அணிதிரண்டு அறநிலையத்துறை ஊழியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர் அதில்பணியில் உள்ள உயர் அதிகாரிகளும் சில ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளும்  பணியாளர்களும் கலந்துகொண்டு தங்களது ஊழல்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பேசி கலைந்தனர் .

அந்த போராட்ட மேடையில் இருந்த பேனரில் ஹிந்து என்ற வார்த்தையே இல்லை மேலும் அற நிலையத்துறையில் பணிபுரியும் நபரும் வழிநடத்தும் நபரும் கடவுள் மறுப்பாளர்களான சுபவீரபாண்டியனையும் அருள்மொழி என்ற தி க பொம்பளையையும் அழைத்து வந்து பேசச்செய்தனர் அவர்களும் இவர்களுக்கு  துணை நிற்போம் என்றனர் .மேலும் எதற்கு இந்த போராட்டம் தங்களது எஜமானர்களின் ஏவலாளிகள் அதில் கலந்து கொண்டு உத்தரவிட்டு செல்ல நினைத்தனர் அவ்வளவுதான் . உனக்கு நான் பாதுகாப்பு எனக்கு நீ பாதுகாப்பு .உன்னதை நன் சொல்லமாட்டேன் என்னதை த நீ சொல்லாதே என்ற ஜெண்டில் மென் அக்ரிமெண்ட்தான் வேறொன்றும் இல்லை .என்னதான் மூடி மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெல்லும்அன்று உலகம் உண்னை இகழும்  ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது அன்று மட்டுமல்ல என்றும் உண்மைதான் என்பதற்கு சான்றுதான் இன்று அறநிலையத்துறையின் சொத்துக்கள்  டிஜிட்டல்  மயமாக்கலின் வெளிப்பாடாக வெளிச்சத்துக்கு வந்துள்ள உண்மைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *