தனி நபர்கள் உருவாக்கிய பிட்காயின், எதீரியம், லைட் காயின் உட்பட பல கிரிப்டோ கரன்சிகள் (மெய்நிகர் நாணயங்கள்) சர்வதேச அளவில் வணிகம் செய்யப்பட்டு வருகின்றன. பல பயங்கரவாத அமைப்புகளின் நிதி பயன்பாடுகளுக்கு இவை பயன்படுகின்றன. தேசத்தின் நிதி ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் இந்த மெய்நிகர் நாணயங்களை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்த குழுவின் அறிக்கையின்படி இவை தடை செய்யப்பட்டதுடன் இதில் பணப் பரிவர்தனை செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை சட்டமாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.