டிசம்பர் 14 ஸ்ரீமந் நாராயணீய நாள்

கார்த்திகை , மார்கழி மாதங்களில் திருமணமண்டபங்கள், மினி ஹால்கள் எவையாயினும் சரி விழாக்கள் கொண்டாட வேண்டுமானால் சில மாதங்கள் முன்னதாகவே புக் செய்திருக்க வேண்டும். அய்யப்ப பூஜைகள், இசை கச்சேரிகள், என்று இரண்டு மாதங்களும் பக்தர்கள் பகவன் நாமம் ஸ்மரிப்பத்தில், ஆலயங்கள் பலவற்றிற்கும் தரிசனம் செய்யச்சென்று அவன் புகழ் பாடி மகிழும் பிரத்யேக மாதங்கள் இவை.

நாராயணீய நாள் அன்று ஆங்காங்குள்ள பக்தர்கள் குழுக்களாக அவரவர் இல்லங்களிலோ, பெரிய பெரிய ஹால்கலிலோ ஸ்ரீ குருவாயூரப்பன் படங்கள், ஸ்ரீ கிருஷ்ணன் சிலைகள் என்றெல்லாம் பூஜை மேடைகளில் வைத்து பூ அலங்காரம் செய்வர். ஜெவ்வந்தி, மல்லி, பிச்சிப் பூ, என்று பலவித மாலை அலங்காரத்தில் கிருஷ்ணன் ஜொலி ஜொலிப்பான். துளசி மாலை அலங்காரத்தில் மதுசூதனன் கேசாதி பாதம் வரை அருளை அள்ளிக்கொடுப்பான். நாடு முழுவதும் பல சமாஜங்கள், வைதீக அமைப்புக்கள், இவ்விழாவைப் பெரிய அளவில் நடத்துகின்றன. குருவாயூர் கோவில் மண்டபத்தில், அங்குள்ள பல இல்லங்களில் பல குழுக்கள் சொல்லும் நாராயணீயம் ஸ்லோகங்களை நாளை கேட்போர் பலரும் தெய்வீக உணர்வலைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். முழு பக்தியுடன் ஸ்ரீமந்நாராயணீய ஸ்லோகங்களை மெதுவாகச் சொல்ல குறைந்தது ஆறு மணி நேரங்களாவது ஆகும். பூஜை, ஆரத்தி முடிந்தவுடன்
பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும். நாராயணீயத் திருவாழாவாகக் கொண்டாட சென்னையிலிருந்து கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விரைந்து கொண்டிருக்கிறது ஒரு குழு

\

குருவாயூரில் நடந்த நாராயணீய விழா