அதிபர் டொனால்டு டிரம்ப், டில்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.”நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை. இரண்டு நாள் இனிமையான பயணம், உங்களுடைய கேள்விகளுக்கான பதிலால் தேவையில்லாமல், பிரச்னையை ஊதி பெரிதாக்க விரும்பவில்லை. அதனால், மிகச் சுருக்கமாக பதில் அளிப்பேன்,” என்ற அறிமுகத்துடன், டிரம்ப் அளித்த பேட்டி:காஷ்மீர் விவகாரம் …இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மிகப் பெரிய பிரச்னை. ரோஜா இருக்கும்போது, முள்ளும் இருக்கும்.மத்தியஸ்தம் செய்வீர்களா?இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் குறைவதற்கு, தேவைப்பட்டால், மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளேன்.பாக்., குறித்து பேசினீர்களா?பேசினோம்.
பாக்., பிரதமர் இம்ரான் கானுடனும் நல்ல நட்பு உள்ளது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க அவர்களும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.மத சுதந்திரம் குறித்து…மக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தான் மோடி விரும்புகிறார்.முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு உள்ளதே?இது குறித்தும் பேசினோம். முஸ்லிம்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக மோடி கூறினார்.இந்தியா மற்றும் மோடி குறித்து…மோடி, மிகச் சிறந்த தலைவர். இந்தியா பிரமாண்டமான நாடு.குடியுரிமை திருத்த சட்டம்…குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. அது இந்தியாவின் பிரச்னை. அரசு, மக்களுக்கு நல்லதே செய்யும் என்று நம்புகிறேன்.டில்லி வன்முறை…இது குறித்து கேள்விப்பட்டேன். ஆனால், அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை.இவ்வாறு அவர் கூறினார்.