எழுவது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி, அதிகாரத்தில் ஊறி திளைத்த கட்சி ஒன்று நமது நாட்டில் தனது குடும்ப உறுப்பினரை மட்டுமே தலைவராக ஆக்கவேண்டும். என்பதாற்காக ஓராண்டுக்கு மேலாக தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளனர். ஆனால் பாஜகவிலோ நிலைமை தலைகிழாக உள்ளது.
அதாவது, கர்நாடக மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மேலவைக்கு கே.நாராயணன் என்பவரை பா.ஜ.க. வேட்பாளராக அறிவித்துள்ளது. அரசியல் உலகில் அறியப்படாத நபர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க. விற்கு அமைதியாக வேலை செய்து வந்துள்ளார். சிறுவயதிலிருந்தே ஸ்வயம்சேவகர். மங்களூரில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘ஸம்ஸக்ருத பாரதி’ அமைப்பு நடத்தி வருகிற ‘சம்பாஷன சந்தேஷா’ மாத இதழ் இவரது அச்சகத்தில்தான் தயாராகி வருகிறது. நெசவுத் தொழில் செய்து வருகிற ‘தேவாங்கர்’ சமுதாயத்தை சேர்ந்தவர். 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அசோக் கஸ்தி என்பவரை பா.ஜ.க. நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்தது.
துரதிஷ்டவசமாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் 2 மாதத்திற்கு முன்பு மரணமடைந்தார். மறைந்த அசோக் கஸ்தி முடித்திருத்தும் சமுதாயத்தை சேர்ந்தவர். அவரும் பா.ஜ.க.வில் ஒரு சாதாரண தொண்டராக பல வருடங்கள் வேலை செய்தவர். பா.ஜ.க. துவங்கப்பட்டதிலிருந்தே சாதாரண தொண்டர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை அரசியலில் மேல்நிலைக்குக் உயர்த்திவந்துள்ளது. என்பதற்கு இதற்கும் மேல் என்ன உதாரணம் வேண்டும்.