ராஜராஜசோழன் கட்டிய கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் சிவன் கோயில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் இந்த கோயிலின் 50 சிலைகள் ஏற்கனவே திருடு போயுள்ளன, கோயிலும் சிதிலமடைந்துள்ளது. இந்நிலையில் கோயிலின் 35 ஏக்கர் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம், விளையாட்டு திடல் அமைக்க முடிவெடுத்த அதிமுக அரசு, முறையான அறிவிப்பின்றி அடிக்கல் நாட்டியுள்ளது.
80 கோடி மதிப்புடைய நிலத்தை 2 கோடிக்கும் குறைவாக மதிப்பிட்டுள்ளது. கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு செய்யப்பட்டதாக கணக்கு காட்டி கையாடலும் நடைபெற்றுள்ளது.
கோயிலையும் அதன் சொத்துக்களை பாதுகாக்காமல் அரசே அதை அபகரிப்பதும், கோயிலின் நிலத்தை அரசுக்கு குத்தகைக்கு விடாமல் விற்பதும் தவறான அணுகுமுறை.