கோமாதா பக்தர் கொலை

மத்திய பிரதேசத்தில் மாடு கடத்தலில்  ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தார் அஜய்முடா என்ற பட்டியலினத்தை சேர்ந்த ஆசிரியர்.  இதனால் ஆத்திரமுற்ற கடத்தல்காரர்கள், அவரையும் அவரது உறவினரான சஞ்ஜீவ் முடாவையும் தாக்கியுள்ளனர். இதில் அஜய் முடா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சஞ்ஜீவ் முடா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதில் ஈடுபட்ட ரியாஸ் கசாய், ஷமிம் கசாய், கயாம் கசாய், பாபா கசாய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.