குருபெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

மேஷம் :

நெஞ்சுரம் மிக்க மேஷ ராசி அன்பர்களே!

ஆன்மீகத்தில் நாட்டமுடைய நீங்கள் அறிவாற்றலும் பெற்றவர்கள். பணிவுடைய பண்பு கொண்ட நீங்கள், கண்டிப்பானவரும் கூட, ஆடை, அலங்காரத்தில் விருப்பமுடையவர், கம்பீர தோற்றமும் உடையவர், கோபம் உண்டு, கனிவும் உண்டு, புகழும், செல்வாக்கும் பெற்று நீண்ட நாள் சுகமாக வாழ்வீர்கள். கவுரவம் பெற்று அரசு ஆதரவுடன் சிறந்த மனிதராக திகழ்வீர்கள்.

உங்கள் மேஷ ராசிக்கு 9,12–க்கு உரிய குரு பகவான் எட்டாம் இடமான விருச்சிக ராசியிலிருந்து ஒன்பதாம் இடமான தனுசுவிற்குள் இனி சஞ்சரிக்கப் போகிறார். தனது சொந்த வீட்டிலிருந்து உங்கள் ராசியையும், மிதுனத்தையும், சிம்மத்தையும் சுப பார்வையாக பார்க்கப் போகிறார்.

எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் செவ்வாய் பகவானின் ஆளுமை உடைய நீங்கள் இனி சிந்தித்து செயல்படும் அனைத்து காரியங்களையும் வெற்றி பெறச் செய்வார். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆரோக்கியம் பெருகும். வழக்குகள் சாதகமாகும். விரோதிகள் நண்பர்களாக மாறுவார்கள். உங்கள் வாக்குக்கு மரியாதை கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் :

வெகுநாட்களுக்குப் பிறகு மிகச்சாதகமான கிரக சஞ்சாரங்கள் நிகழ்வதால் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். நட்பை விட்டு விலகிச் சென்றவர்கள் இப்போது நாடி வந்து இணைவார்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்ற இயலாமல் சென்ற கடந்த காலம் இனி, குரு அருளால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள், சிலருக்கு பணியிடத்தில் பதவி உயர்வும், பொருளாதார உயர்வும் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். பல விதமான இன்னல்களை சந்தித்து பக்குவப்பட்ட நீங்கள், சாதகமான நேரத்தில் அமைதியாக விளங்குவீர்கள். பகைமை மறந்து நட்பு வட்டத்திலும், பணிபுரியும் இடத்திலேயும், உறவினர் மத்தியிலும் இனிய சூழலை நடைமுறைப் படுத்துங்கள்.

வசதிகள் பெருகுவதால், வாகனம் வாங்கும் வாங்கவும் விருப்பம் ஏற்படும். குடும்பத் தேவைகளுக்காக பெற்ற கடன்களை விரைந்து அடைக்க முயற்சி தேவை. மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற போவதால் அதற்கு தயாராக இருக்க வேண்டும். புத்தாடை அணிந்து புத்துணர்ச்சியுடன் திகழுங்கள். தெய்வ அனுக்கிரஹம் கிடைக்கும்.

பெண்மணிகள் :

பணிபுரியும் பெண்மணிகளுக்கு சாதகமான அலுவலகச் சூழல் அமையும். விரும்பிய மாற்றமும் பணியும் கிடைக்கும். வேறு வேலை தேடியவர்களுக்கு பதவியும் உயர் ஊதியமும் கிடைக்கும். இளம் பெண்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு நல்ல சேதி கிடைக்கும். இல்லறத்துணையின் ஆதரவு உண்டு. குலதெய்வ வழிபாடும் மகான்களின் தரிசனமும் அவசியம் தேவை.

சேமிப்பை அதிகப்படுத்தவும் ஆபரணங்களை தரம் பார்த்து வாங்கவும். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை தவறாமல் செய்யவும். ஆரோக்கியம் மேன்படும். அதிருஷ்டமான பலன்கள் தொடர்ந்து நடைபெறும். வசதிஇல்லாத இளம் சிறுமிக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்கவும்.

மாணவமணிகள் :

உயர்கல்விக்கு முயற்சி செய்தவர்களுக்கு அடுத்த வாய்ப்பு நிச்சயமாகக் கிடைக்கும். ராகு 2–ம் இடத்திற்கும் கேது 8–ம் இடத்திற்கும் வரப்போவதால் சஞ்சலமான மனநிலையும் தடிப்பான வார்த்தைகளும் தவிர்க்கப்பட வேண்டும். கல்விக்கு தேவையான உதவித்தொகை கிடைக்கும். வெளிநாடு செல்பவர்கள் தேவையான பயிற்சியை மேற்கொள்ளவும். பரிசுகள், பாராட்டுகள் பெறுவீர்கள். நேர்முகத் தேர்வுகளில் செம்மையாக செயல்பட்டு விருப்பமான பணி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம் :

விலகிச் சென்ற பங்குதாரர்கள் விரும்பி வந்து இணைவார்கள். புதிய பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நம்பிக்கையான பணியாளர்களை மகிழ்வித்து வைத்துக் கொண்டால், தொழிலை விரிவு செய்ய முடியும். புதிய தொழிலை துவங்கலாம்.

சிலரின் புதிய அறிமுகமும் அதன்மூலம் தொழில் விருத்தியும் பெறும். பிரச்சினைகள் குறையும். ஆதரவான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நேர்மை எனும் மந்திரத்தால் தனலாபம் பெருகும்.

அரசியல்வாதிகள் :

தலைமையின் ஆதரவு கிடைப்பதால் தொண்டர்களும் பின் தொடர்வார்கள். பதவி, பொறுப்புகள் அதிகரிப்பதால் வருமானமும் அதிகரிக்கும். உங்களின் செல்வாக்கை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வதை கண்காணிக்கவும். விவாதங்களில் பங்குகொள்ளும் போது நிதானமாக பேச வேண்டும்.

மேஷம்

பரிகாரம் :

நிறைவான பலன்கள் கிடைக்க விநாயகரை வழிபடுங்கள். பவுர்ணமி கிரிவலம் நன்மைகளை உச்சப்படுத்த உதவும்.

ரிஷபம் :

வெற்றிகளை அடைய உழைக்கும் ரிஷபராசி அன்பர்களே

கம்பீரமாகவும், கவர்ச்சியாகவும் காட்சியளிக்கும் நீங்கள் மென்மையானவரும் கூட கலைகளில் ஆர்வம் இருக்கும் . கருத்து கூறுவதிலும் ஒரு நேர்த்தி இருக்கும். கணிதத்திலும், கலைகளிலும் திறன் பெற்ற நீங்கள் அழகாகப் பேசுபவர்கள். செயல்திறன் மிக்கவர்களை கண்டுணர்ந்து பணிகளை ஒப்படைக்கும் பண்புடையவர். அனைவரிடமும் அன்பாக பேசும் நீங்கள் ஆதரவாகப் பேசுபவர்களிடம் அளவளாவுவதில் விருப்பம் கொண்டவர்.

உங்கள் ராசிக்கு 8,11-க்குரிய குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியான தன் ஆட்சி வீட்டிற்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8-க்கு உரியவர் 8-ல் சனி, கேதுவுடன் இணையப் போவதால் சிரமங்கள் குறையும். தான் விலகுகின்ற போதில் நன்மையையே செய்யும் சனி பகவான் உங்களை விலகிட மாட்டார்.

2,4,11–ம் இடங்களை குரு சுபபார்வை பார்ப்பதால் உங்களின் வாக்கு பலப்படும். உங்கள் சொல்லுக்கு மரியாதை அதிகரிக்கும். சகோதர,சுக,லாப ஸ்தானங்களை குரு பார்ப்பதால் நல்லவர்களின் ஆதரவை பெறுவீர்கள். ஆரோக்கியம் காப்பீர்கள். உடல் உறுதியாகும். பொருளாதாரம் உயரும். சமூக அஸ்தஸ்து மிக்கவர்களுடன் நட்பு ஏற்படும்.

உறவினர்கள் மீண்டும் மதிப்பு, மரியாதை அளிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மீண்டும் குடும்ப உறவு பலப்படும்.

உத்தியோகஸ்தர்கள்:

அலுவலக சுழலில் சக பணியாளர்களின் ஆதரவும் குறையும். நட்ப்புக்காக விட்டுக்கொடுத்துக் சென்றால் சிலரின் நட்பு நிலைக்கும். சில காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

பயணங்களின் போது பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அலுவலக தஸ்தாவேஜூகளை கவனமாக கையாள வேண்டும். பணம் வாங்கும் இடத்தில் பணியாற்றும் காசாளர் போன்றவர்கள் பொறுப்புகளை பெறும் போதும், ஒப்படைக்கும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டும்.வீடு , மனை என அசையா சொத்துகள் விலையுர்ந்த பொருட்களை வாங்கும் போதும் பெரிய தொகை கடன் தரும்போதும் வாங்கும்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உங்கள் ராசிக்கு 8-ல் சனி,கேது இருக்கின்ற இந்த நேரத்தில் குரு பகவானும் உடன் சேர்ந்து அமரப் போவதால் எண்ணற்ற தடை தாமதங்களும் , பொருள்கள் களவாடப்படுவதும் நடைபெறலாம். என்பதால் அஜாக்கிரதை தவிர்க்க வேண்டும். இரண்டாம் இடத்தையும், பன்னிரெண்டாம் இடத்தையும் குரு பார்ப்பதால் பணப் பற்றாக்குறை நீங்கும். உத்தியோகம் உயர்வடையும். 4-ம் இடத்தை குரு நோக்குவதால் வாகனம், வீடு வாங்க முடியும். தாயாரின் உடல் நலம் ஆரோக்கியம் பெறும்.

பெண்மணிகள்

இல்லறத் துணையின் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். விரயஸ்தானத்தையும், தன குடும்ப, வடக்கு ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும் குரு பார்வை புனிதப்படுத்துவதால் பொருளாதார  சிக்கல்களை திறம்பட கையாளுவீர்கள் . அடகு வைத்த நகைகளை மீட்கலாம். விலை உயர்ந்த பொருட்களை இரவல் கொடுப்பதோ, இரவல் வாங்குவதோ கூடாது. தோழிகளின் உறவினர்களின் நட்புக்காக எவருக்கும் ஜாமீன் தாரதீர்கள்.

இளம்பெண்கள் இல்லறத்துணையை தேர்ந்தெடுக்கும் போது விசாரித்து அறிந்து ஒப்புதல் அளிக்கவும். எதிர்பாலினரிடத்தில் எச்சரிக்கையுடன் பழகவும். நெருக்கம் தவிர்க்கவும். உறவினர் தரும் தொல்லைகளை கண்டுகொள்ளாமல் இருக்க பழகவும். ஊனமுற்றவர்களுக்கு உதவிசெய்யவும்.

மாணவமணிகள்:

கல்வியில் நாட்டம் அதிகரிக்க வேண்டும். வாக்கு சாதுர்யத்துடன் பணியாற்றும் பணி கிடைக்கப்பெற்றால் சிறப்பாக வேலை செய்ய முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். ராசிக்குள் அடியெடுத்து வைக்கப்போகும் ராகு,7-ல் நுழைப்போக்கும் கேதுவால் அதிருஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். அலட்சியம் தவிர்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம். நேர்முக தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். படிப்பை தவிர மற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

சிறுதொழில் வியாபாரம்

மாறிவிடும் காலச்சூழலுக்கு ஏற்ப சிலமாற்றங்களை செய்யலாமேத் தவிர அதிக அளவு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும் என்பதாலும் போட்டியாளர்களின் செயல்களும் அச்சத்தை ஏற்படுத்தும்  என்ற போதிலும் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.

ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் தகுந்த நிறுவனங்களின் உதவியுடன் செயல்படவும் நம்பிக்கையான நபர்களை உடன் வைத்து கொள்ளவும். வங்கிக் கடன்களை சிறிது சிறிதாக செலுத்திவிடவும்.

அரசியல்வாதிகள்:

தலைமையின் தொடர் கண்காணிப்பில் இருப்பதால் சக கட்சியினரிடத்தில் ரகசியம்காக்க வேண்டும். தொண்டர்களையும் ஆதரித்து நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் போராட்டக் காலங்களில் அதிதீவிர ஈடுபாடு தவிர்க்க வேண்டும். சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளைச் செய்து நற்பெயரை ஈட்டவும். இறை வழிபாடு இன்னல்களை தவிர்க்கும்.

பரிகாரம்:

பலன்கள் பூரணமுற இளம்பிறை சூடிய சிவனை நெஞ்சுருக பிரார்த்தியுங்கள்.

மிதுனம் :

மனதில் நினைத்ததை நிறைவேற்றத்துடிக்கும் மிதுனராசி அன்பர்களே!

திறமையினால் வெற்றியை எட்ட வேண்டும் என்ற கொள்கையுடைய நீங்கள், கனிவும், கண்டிப்பும் இணைந்தே பெற்றவர்கள். கணக்கில் விட்டுக்கொடுக்காதவர்கள் அதே சமயம் இரக்க குணத்துடன் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். வாக்குவன்மை மிக்கவர்களான நீங்கள், சிலரை முன்னுதாரணமாகக் கொண்டு செயலாற்றுவீர்கள். உங்களின் திறமையை உணர்ந்து கொண்டவர்கள் தொடர்ந்து உங்களுக்கு உதவி வருவார்கள்.

உங்களின் மிதுனராசிக்கு ௭,௧௦க்குரிய குருபகவான், இதுநாள் வரை ௬ ம் இடமான விருச்சிகத்தில் சஞ்சரித்து வந்தாலும், ௨,௧௦,௧௨ம் இடங்களை தன்னுடைய பார்வையால் புனிதப்படித்திருக்கிறார் என்பதால் பொருளாதார பிரச்சினைகளை சமாளித்து வந்துள்ளீர்கள். ௭ம் இடத்திலிருந்து சனி, கேது ஆகிய கிரகங்கள் தங்களை பார்த்து வந்ததால் சில இடையூறுகளை சந்தித்து சிரமப்பட்ட உங்களுக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக குரு பகவானும் தனுசு ராசிக்குள் பிரவேசித்து உங்களின் வளர்ச்சிக்கும் நல்ல வழி காட்டுவார். பல சிரமங்கள் குறையும்.

எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைக்கும். சில சம்பவங்கள் சங்கடப்படுத்தியிருந்தாலும், சிலரால் ஏமாற்றப்பட்டு இருந்தாலும் அனைத்தையும். மறைத்துக்கொண்டு இனிமையாகப் பழகவும். குருபகவான் உங்களின் மிதுனராசியை நேரிடையாகப் பார்த்து புனிதப்படுத்தவதோடு, சகோதர ஸ்தானமான ௩ம் இடத்தையும், லாப ஸ்தானதையும் பார்த்தால் சிறப்பான முன்னேற்றத்தை அளிப்பார்.

முதியவர்களுக்கு உதவுங்கள்!

உத்தியோகஸ்தர்கள்:

சக பணியாளர்களின் உபத்திரவங்கள் இனி கரைந்து போகும். உயரதிகாரிகளின் பாராட்டுகளைளப் பெறுவது மட்டுமின்றி, ஊதிய உயர்வுக்கும் பரிந்துரைக்கப்படுவீர்கள். ௩ம் இடமான சிம்மத்தையும், ௧௧ம் இடமான சிம்மத்தையும் குரு பார்வை படுவதால் ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். அதே சமயம் வீடு, மனை, அடுக்குமாடி வாங்கும் யோகமும் கிடைக்கும். விருப்பமான வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அதிக வருமானமும் பெறுவார்கள். பெருமை புகழ் ஓங்கும் இந்நேரத்தில் அனைவருடன் இணைந்து பணியாற்றுவது நன்மை தரும். தளர்ச்சி விலகி வளர்ச்சியும், மலர்ச்சியும் ஏற்படும்.

பெண்கள்:

கடினமான பணிகளை செய்த நீங்கள் இனி வசதியான இடத்தில் சுலபமான பணியில் நியமிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள சிலர் முன் வருவார்கள். அதேசமயம் சகோதர, சகோதரிகளின் வளர்ச்சியால் மகிழ்ச்சி கிடைக்கும். பணி நிமித்தமாக வெளிநாட்டில், வெளியூரில் வசித்த இல்லறத்துணை இனி உங்களுடன் வாழ்ந்து மகிழ்ச்சித் தருவார். மழலைக்கு ஆசைப்பட்டவர்கள் புத்திரபாக்கியம் பெறுவார்கள்.

குருவின் நேரடிப் பார்வை பெறுவதினால் இளம்பெண்கள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைப்பார்கள். ௭ம் இடத்தில் சனி, கேது உள்ளவரை தவறான மனிதர்களின் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

மாணவமணிகள்:

உங்கள் ராசியில் உள்ள ராகுவை குருபகவானின் பார்வை புனிதப்படுத்தும். அயல்நாடு செல்ல விரும்புகிறவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். விளையாட்டிலும், போட்டிகளிலும் கலை, இலக்கியத் துறையிலும் பாராட்டுகள் கிடைக்கும். நுண்கலையில் பயிலும் மாணவர்கள் பரிசுகள் பெறுவார்கள். தகுந்த ஆலோசகர்களை நாடி, உயர்கல்விக்கான ஆலோசனைப் பெறவும். திட்டமிட்டு செயல்படவும். எதிர்பாலின ஈர்ப்புகளைத் தவிர்க்கவும்.

சிறுதொழில், வியாபாரம்:

தொழிலுக்குத் தேவையான கடன்களைப் பெற முடியும். அகலக்கால் வைக்காமல் நிதானமாக முன்னேற திட்டமிடுங்கள். வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளர்ச்சிக் காணலாம். பங்குதாரர்களை சமாதானப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்யவும். புதியாந்திரங்கள், கிளைகள் என விஸ்தீரணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வரவு–செலவு கணக்குகளையும், கொள்முதல், இருப்பு விவரங்களையும் நேரிடையாக கவனிக்கவும். நிர்வாகத்தை கவனிக்கும் உயர்நிலை ஊழியர்களின் தொடர்புகளை ஆராய வேண்டும்.

அரசியல்வாதிகள்:

செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். அதேசமயம் கடுமையான பயணங்களும் உழைப்பும் அதிகரிக்கும். நற்பெயரை பாதுகாக்க வேண்டும். குடும்பத்தினர், நண்பர்களின் ஈடுபாடு காரணமாக சில சங்கடங்களை சந்திக்க நேரிடலாம். பத்திரிகையாளர்கள், எதிர்கட்சி நண்பர்களையும் தனிமையில் சந்திப்பதைத் தவிர்க்கவும். பதவியால் அந்தஸ்து உயரும். அதே சமயம் சக கட்சியினரால் பதவி இறக்கமும் ஏற்படலாம். நேர்மையாக செயல்படுங்கள், தேவையான வருமானம் கிடைக்கும்.

பரிகாரம்:

இனியவை யாவும் நனவாக ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

கடகம் :

தலைமைப் பண்பு உடைய கடகராசி அன்பர்களே!

உங்களின் ஆற்றலும் அதிரடியான செயல்களும் அனைவராலும் பாராட்டப்படும். பேச்சிலும், செயலிலும் தெளிவான உங்கள் சிந்தனை, புகழ்கிறவர்களின் எண்ணத்தையும் புரிந்து கொள்வீர்கள். செல்வமும், செல்வாக்கும் பெற்ற நீங்கள், ஆன்மிகத்திலும் நாட்டமுடையவர்கள். உங்களின் திறமையை மற்றவர்கள் வாயிலாக கேட்பதில் விருப்பமும் உடையவர்கள்.

உங்கள் கடகராசிக்கு ௬,௯க்குரியவரான குருபகவான் விருச்சிகராசியிலிருந்து தனுசு ராசிக்குள் இடம் பெயர்கிறார். இதுநாள் வரை உங்கள் ராசியை நேரிடையாக பார்த்து பல மங்கல நிகழ்ச்சிகளை, வளமான வாழ்வை அளித்த குரு பகவான், மேலும் வளர்ச்சிக்கான பாதையை காட்டவுள்ளார். ராசிக்கு ௨,௧௦,௧௨ம் இடங்களை குரு புனிதப்படுத்துவதால் நற்பலன்கள் தொடரும். வேறு வேலை கிடைப்பதன் மூலம் வருமானம் அதிகரிக்கும்.

செலவுகள் கட்டுப்படும். சேமிப்பு சிந்தனை வளரும். சனி, கேது ௬ம் இடத்தில் உள்ளதால் உங்களது திட்டங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். விலகிச் சென்றவர்கள் உங்களின் தன்மை புரிந்து நாடி வருவார்கள். உங்களின் லட்சியப்பாதையில் எந்தவித இடையூறும் இன்றி செயல்படுவீர்கள். ராகு ௧௨லிருந்து ௧௧ம் வீடான லாபஸ்தானத்திற்குச் சென்ற பிறகு வருமானமும், புகழும் அதிகரிக்கும். ௫ல் வரும் கேதுவினால் புத்தி தெளிவும், செயல்திறனும் அதிகரிக்கும். உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது நன்மை பயக்கும்.
உத்தியோகஸ்தர்கள்:

உங்கள் பணியை பற்றி மட்டும் சிந்திக்கவும். சக ஊழியர்களின் தவறுகளை சுட்டுக்காட்ட வேண்டாம். தேவையற்ற பேச்சுகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். அலைச்சல் மிகுந்த பணியில் உள்ளவர்கள் வாகனப் பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ௨ம் இடத்தை குரு பார்த்தால் ஊதிய உயர்வும், புதிய வேலை வாய்ப்பும் அமையும். ௧௦ம் இடத்தை குரு பார்ப்பதினால் உயர்ந்த உத்தியோகமும் கிடைக்கும். ௬ல் உள்ள சனி, கேது இடம் மாறுகிற வரை தைரியம் மிகுந்து காணப்படும்.

அலுவலகத்திலும், குடும்பத்திலும் சிலரின் விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டால் கஷ்டங்கள் விலகி விடும். நண்பர்களாக பழகியவர்கள் வேறு விதமாக பழகுவதால் ஏமாற்றம் அளிக்கும் என்பதால் பேசுவதை குறைத்துக்கொள்ளவும். மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு திட்டங்களில் இணைந்து கொள்வது பிரச்சினைகளை சமாளிக்க உறுதுணையாக இருக்கும். கேதுவும் சனியும் பெயர்ச்சி ஆகும்போது எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவும். ராகு ௧௧ல் இடம் மாறும் போது தைரியம் அளித்திடுவார். புன்னகையுடன் பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள்.

பெண்மணிகள்:

கருத்து வேறுபாடுகளை களைய கணவருடன் கலந்து பேசுங்கள். விவாதம் தவிர்க்கவும். இல்லறத்துணையின் உதவியுடன் குடும்பத்தின் மேன்மைக்கு வழி காணுங்கள். செலவுகளை சமாளிக்க சேமிக்கப்பழகுங்கள்.

இளம்பெண்கள் சற்று எச்சரிக்கையுடன் எதிர்பாலினரிடத்தில் பழக வேண்டும். எங்கு சென்றாலும் தனித்திருப்பதை தவிர்க்கவும். தாய்மை பேறு அடைந்த பெண்கள் மருத்துவரை நாடி ஆலோசனை பெறுவது அவசியம். திருமண ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும். அசையா சொத்துகளை வாங்கும் முன் விசாரிக்கவும். புன்னகையுடன் வலம் வந்தால் என்றும் வாழ்வில் வசந்தம்தான். வசதியற்ற நோயாளிகளுக்கு உதவுங்கள்!

மாணவமணிகள்:

மெத்தனமான போக்கை தவிர்த்துவிட்டு கடுமையாக உழைத்து படிக்க வேண்டும். உயர்கல்விக்கு தேவையான பயிற்சியை பெற்றுவிட்டால் ராகு பகவான் தகுந்த பலனைத் தருவார். பாட சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும். தனித்திறன் பயிற்சிகளை பெறுவது நேர்முகத் தேர்வில் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு படிக்க உதவித்தொகையும் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்க சனி,ராகு உதவிடுவார்கள்.

சிறுதொழில், வியாபாரம்:

பங்குதாரர்கள் விலகுவதால் நன்மையே உண்டாகும். புதிய பங்குதாரர்களின் தரம் அறிந்து இணைத்துக் கொள்ளலாம். வரவு–செலவு கணக்குகளை சரிபார்த்துக் கொண்டால் போதும், அதிக முதலீடுகளை தவிர்க்கலாம். வங்கிக்கடனை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யவும். புதிய ஒப்பந்தங்களை ஆலோசனை பெற்று கையொப்பம் இடுவது நன்மை தரும். மதிப்புமிக்க மனிதர்களின் நட்புணர்வு கிடைக்கும். அறிமுகமில்லாதவர்களிடம் விலகிச் செல்ல வேண்டும். உற்பத்தித்துறை வளரும். போட்டியாளர்கள் விலகுவார்கள். சிறந்த ஊழியர்களை உற்சாகப்படுத்தவும்.

அரசியல்வாதிகள்:

நம்பிக்கையானவர்களை தேடி பிடிக்க வேண்டும். எதிர்பாலினவர்களிடமும், அறிமுகம் இல்லாதவர்களிடமும் நெருங்கி பழக வேண்டாம். அரசியலில்–எதிர்கட்சியினரிடத்தில் பகைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அரசு அதிகாரிகளிடத்திலும் மோதல் போக்கைத் தவிர்க்கவும். தலைமைக்கு நெருக்கமானவர்களால் நெருக்கடி ஏற்படலாம் என்பதால் அனைவரையும் அனுசரித்துப் போகவும். பொறுமையுடன் இருந்தால் பெருமை தானாக வரும்.

பரிகாரம் :

தட்சிணாமூர்த்தியின் இணையடியைத் தொழுதால் நன்மைகள் குவியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *