கி.வீரமணியை தொடர்ந்து, வைரமுத்துவை துரத்தியடித்த மலேசிய இந்துக்கள்!

கவிஞர் வைரமுத்து இந்து தெய்வங்களையும், இந்து நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

தமிழாற்றுப்படை என்ற பெயரில் அவர் வெளியிட்ட கட்டுரைகளை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டு வியாபாரம் செய்ய தொடங்கினார். இந்தப் புத்தகத்தை டிசம்பர் 3-ஆம் தேதி மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் வியாபாரம் செய்வதற்காக திட்டமிட்டு இருந்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்துவிட்டார்.

இதற்கிடையே இந்த தகவல், மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வைரமுத்துவை மலேசிய நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினர்.

மலேசியாவில் உள்ள இந்து தர்ம மாமன்றம் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து, கோலாலம்பூரில் உள்ள “மலேசியன் இந்தியன் காங்கிரஸ்” அரங்கத்தில் வைரமுத்துவின் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று அதன் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்..

கடந்த வாரம் தி.க. தலைவர் கி.வீரமணியை, மலேசியாவில் அனுமதிக்கக்கூடாது என்று மலேசிய அரசாங்கத்திற்கும் கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து கி.வீரமணியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அதே போல இப்போதும் மலேசிய இந்து தர்ம மாமன்றமும், இந்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து வைரமுத்துவை துரத்தி அடிக்க ஓரணியில் திரண்டு உள்ளன. மலேசிய அரசுக்கும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இதனால் வைரமுத்து, மலேசியாவில் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் இருந்து செல்லும், இந்து விரோத கும்பல்களுக்கு மலேசிய இந்துக்கள், தக்க பாடம் புகட்டி வருகின்றனர். சுப.வீரபாண்டியன், சீமான், திருமுருகன் காந்தி போன்றோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

7 thoughts on “கி.வீரமணியை தொடர்ந்து, வைரமுத்துவை துரத்தியடித்த மலேசிய இந்துக்கள்!

  1. இந்துக்கள் பொங்கி எழுந்தால் தாங்க மாட்டார்கள்

  2. Whole Ramagopalan of Hindi Munnani and arkun spath of Himdu Makkal Katchi without understanding the root cause for the sufferings of Hindus helping the politicians for the sufferings of Hindus, there is no use propagating for Hinduism in this way.

  3. Whole Ramagopalan of Hindi Munnani and arkun spath of Himdu Makkal Katchi without understanding the root cause for the sufferings of Hindus helping the politicians for the sufferings of Hindus, there is no use propagating for Hinduism in this way.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *