காஷ்மீர் மாநிலத்தின் இணைப்பு வரலாறு 

இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள்  நாட்டுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு செல்லும் போது  22% முஸ்லிம்களுக்காக சுமார் 27% இந்திய நிலப்பரப்பை பிரித்து பாகிஸ்தான் என்ற பெயரில் கொடுத்தது, மீதமுள்ள 73% நிலப்பரப்பு 78% ஹிந்து மக்கள் வசம் வந்தது . குறிப்பாக வங்காளமும்  பஞ்சாப்பும் பிரிக்கப்பட்டது. சணல் உற்பத்திக்கு   பிரபலமான வங்கத்தில் விலை நிலங்கள் ஒருநாட்டிலும் அதனை உற்பத்தி செய்து  துணிகளாக சாக்குப்பைகளாக ஆக்கும் ஆலைகள் வேறொரு நாட்டிற்கும் சென்றது. பஞ்சாபை எடுத்து கொண்டால் வற்றாத ஜீவநதியான ஸிந்து, ரவி, ஜீலம், போன்ற நதிகள் பாகிஸ்தானிலும் அதனால் விவசாயம் பயன்பெறும் விளைநிலங்கள் இந்திய பஞ்சாபிலும் அமைந்தது. இப்படி மக்களை துயரங்கள், பிரச்சனைகள் மத்தியில் நிராதரவாக தீராத பகையுடன் விட்டுச் சென்றது ஆங்கிலேய அரசு.  இந்த நாடு எந்த காலத்திலும் ஒரே நாடாக வலிமையுள்ள நாடாக ஆகிவிடக்கூடாது என்பதே  பிரிவினையை முன்னின்று நடத்திய  ஆங்கிலேயர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.

        ஆங்கிலேய கவர்னர் ஜெனெரல் மௌண்ட்பேட்டன் திட்டப்படி எல்லா  சிறிய சமஸ்தானங்கள் தாங்கள்  எதாவது ஒரு  நாட்டோடு     இணைந்து கொள்ளலாம் அல்லது தனியாகவும் இருக்கலாம் அது அவரவர் உரிமை என்று சொல்லி, இந்திய சமஸ்தானங்களுக்கு விடுதலையை அறிவித்தார். அப்போது இடைக்கால  அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய்படேல் எல்லா சமஸ்தானங்களின் மன்னர்களிடம் பேசி அவற்றையெல்லாம் இந்தியாவுடன் இணைத்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் 1947 வருடம் இந்தியாவோடு மன்னர் ஹரிசிங்கால் இணைக்கப்பட்டது.

       ஜம்முகாஷ்மீர், ஹைதராபாத்,  பாண்டிச்சேரி,  கோவா, டையூ, டாமன் ,  பகுதிகள் இந்தியாவோடு இணையவில்லை. ஹைதராபாத் நிஜாம் அதனை பாகிஸ்தானோடு இணைக்க முயன்ற போது இந்தியா ராணுவம் மூலம் நிஜாமின் கொட்டம் அடக்கப்பட்டு இந்தியாவோடு இணைந்தது .பின்னர் காஷ்மீர் ராஜா ஹரிசிங் இந்தியாவோடும் பாகிஸ்தானோடும் இணையாது தனியாகவே இருப்போம் என அறிவித்தார். இந்நிலையில் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானிய பட்டான்களை பழங்குடியினர் என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவ ஒத்துழைப்புடன் காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து பல பகுதிகளை ஆக்கரமிக்க துவங்கினர்.

           இதனால் பயந்துபோன காஷ்மீர் ராஜா இந்தியாவின் உதவியை கேட்டார் உள்துறை அமைச்சரான படேல் அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் காஷ்மீர் பிரச்னையை சொல்லி இந்தியாவின் உதவியை கோரியுள்ளதை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நேரு காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல, அது தனி நாடு. அதன் பிரச்சனையில் நாம் தலையிடமுடியாது என மறுத்தார். பின்னர் படேல் ஆர் எஸ் எஸ் தலைவரான குருஜி கோல்வல்கரை தனிவிமானத்தில் காஷ்மீருக்கு அனுப்பினார்.  இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடத்திய குருஜி மன்னரை இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார். இதற்கு எடுத்துகொண்ட நேரத்தில் பாகிஸ்தான் காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கை ஆக்கிரமித்து கொண்டது. காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் கைப்பற்றப்படாமல் இருக்க ஆர் எஸ் எஸ் சின்  தொண்டர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இந்தியாவின் ராணுவ விமானங்கள் வந்திறங்க ஏதுவாக, பாகிஸ்தான்  பீரங்கிப்படை குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட  ஓடு தளத்தை சரி செய்து கொடுத்தனர். ஸ்ரீநகருக்கு 20 கிலோ மீட்டர் முன்பாக பாகிஸ்தான் படைகள் வந்தபோது நமது ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்து எதிரிகளை அடித்து விரட்டி மேலும் முன்னேறாமல் தடுத்தது மேலும் இந்திய ராணுவம் காஷ்மீர்  ஆக்கிரமிப்பில் இருந்து பாகிஸ்தான் படைகளை விரட்ட ஆரம்பித்தது.

    இதற்கிடையில் மௌண்ட்பேட்டன் – கிருஷ்ண மேனனின் துர்போதனையால் நேரு காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள்  சபைக்கு கொண்டு சென்றார். அதனால்தான் இன்றைக்கும் தீராத தலைவலியாக காஷ்மீர் பிரச்சனை உருவெடுத்து நிற்கிறது. 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்த படேல் மூலம் இணைந்த ராஜ்ஜியங்கள் எதிலும் எந்த பிரச்சனைகள் இதுவரை இல்லை. ஆனால் நேரு தனது மூதாதையர்களின் மாநிலம் என ஏமாற்றி  சிறப்பு சலுகை என்று தாஜா கட்டிய காஷ்மீர் பிரச்சனை இன்று வரை இருப்பது நேருவின் முட்டாள்தனத்தையே காட்டுகிறது . அதன் பின்னரும் தனது நண்பரும் முஸ்லிம் மக்களின் தலைவருமான ஷேக் அப்துல்லா குடுப்பத்தினரின் மீதான தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக காஷ்மீருக்கென்று சிறப்பு சட்டப் பிரிவை தனிக் கொடி, தனி பிரதமர், சட்டசபைக்கு 6 ஆண்டுகள் ,காஷ்மிருக்கு மற்ற இந்தியர்கள் வர விசா, போலீஸ், ராணுவம், தபால், தந்தி தவிர்த்து மீதியுள்ள எல்லா விஷயங்களுக்கும் காஷ்மீரின் முன் அனுமதியை பெறவேண்டும் என்ற பிரிவுகள் அதில் சேர்க்கப்பட்டு கிட்டத்தட்ட  தனி நாட்டிற்குரிய  அனைத்து அம்சங்களும் அதில் சேர்க்கப்பட்டது.

          இதன் விளைவாக  1952 ம் ஆண்டு எந்த விஷயத்தை எதிர்த்து ஒரு நாட்டிற்குள் இரு பிரதமர் இரு கொடி, நுழைய அனுமதி, எது அநியாயம் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அதில் எந்த இந்தியனும் அனுமதியின்றி செல்லலாம் என்று கிளர்ச்சியை தொடக்கி காஷ்மீருக்குள் நுழைகிறார் பாரதீய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான ஜன சங்கத்தின் தலைவரான ஸ்யாமாப்ரசாத் முகர்ஜி . நேருவின் முதல் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர், நேருவின் சிறுபான்மை மோகத்தை எதிர்த்து தேசியவாதியாக அறியப்பட்டவர். அவர் கைது செய்யப்பட்டு காஷ்மீர் சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் சிங்கமென போராடி சிறை சென்ற அவரை காஷ்மீர் அரசு பிணமாகத்தான் வீட்டிற்கு அனுப்பியது.

 இப்படியொரு துணிச்சலான முடிவை அன்று காங்கிரஸ் அரசு எடுத்திருந்தால் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள்  உயிரிழத்திருக்க மாட்டார்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசின் பணம் சிறப்பு சலுகை பேரில் வீணாக்கப்பட்டிருக்காது. ராணுவத்துக்கும் 70 ஆண்டுகளை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்திருக்க தேவையில்லை . தற்போது நரேந்திரமோடி அரசு எடுத்த இந்த துணிச்சலான தைரியமான முடிவை நாம் வரவேற்போம் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருந்த பிரச்சனையை எந்த ஆண்டுக்குள் தீர்ப்போம் சுதந்திரமான, வலிமையான பாதுகாப்பான ஒரு நாட்டை கட்டியமைப்போம்.

இந்த துணிச்சலான நடவடிக்கையினால் காஷ்மீருக்கென தன்னுயிரை தியாகம் செய்த டாக்டர் ஸ்யாமாப்ரசாத் முகர்ஜியின் ஆத்மா மகிழ்ந்திருக்கும்.

ஜெய் ஹிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *