ஆகஸ்ட் 2ம் தேதி ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வேலூர் மாவட்ட முருகன் கோயில்களில் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி, பக்தர்கள் கோயில்களில் தரிசனம் செய்ய மட்டும் அனுமதி. காவடி ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருத்தணி முருகன் கோயிலில்ஆகஸ்ட் 4வரை பக்தர்களுக்கு மொத்தமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு முருகன் கோயில்களுக்கும் இதே நிலைதான். ஆனால், இதே கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கிறிஸ்தவர்களின் மங்கனித் திருவிழா, முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை உள்ளிட்டவை நடைபெற்றன. அவற்றை கொரோனாவை காரணம் காட்டி தடுக்காத தமிழக அரசு, ஹிந்துக்களின் விழாக்களை மட்டும் திட்டமிட்டு தடுப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சமூக இடைவெளியுடன் விழாக்களை கொண்டாட தேவையான நடவடிக்கைகளை ஹிந்து அறநிலையத்துறை செய்யாமல் அதனை ஒட்டுமொத்தமாகத் தடுப்பது கண்டனத்துக்கு உரியது என இணையதளவாசிகளும் பொதுமக்களும் கண்டித்துள்ளனர்.