பாரதத்தில் 50 லட்சம் பேர் கண்ணுக்காக காத்திருக்கிறார்கள். கிடைக்கும் கண்களோ வெறும் 40,000! எனவே, தேவை கண் தான விழிப்புணர்வு இயக்கம்.
தேச பக்தர்களின் நெடுநோக்கு
* ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் சிவராம்ஜியின் விழிகளால் இருவர் பார்வை பெற்றனர்.
* நம் ஹிந்து சமுதாயத்தின் உணர்வுகளை அசைத்துப்பார்த்த சம்பவமான கார்யாலய குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலிதானிகளாகிப்போன பதினோரு பேரில் காசிநாதனின் விழிகளாலும் இரண்டு பேர் பார்வை பெற்றனர்.
* வடசென்னை பிரச்சாரக் ஆக இருந்த தனுசுவின் விழிகளால் இரண்டு பேர் இன்றும் இந்த உலகினை காண்கின்றனர்.
* விவேகானந்தா கல்விக்கழகத்தின் கல்வி அதிகாரியாக இருந்த பேராசிரியர் அண்ணாமலை விழிகளால் இரண்டு பேர் இந்த உலகினை இன்று தரிசனம் செய்கின்றனர்.
அவர்களது வழியில் பல அன்பர்களுடைய கண்கள் சங்க பிரச்சாரக்குகள், சேவா பாரதி அன்பர்கள் எடுத்துச் சொல்லி வருவதன் மூலம், கண்கள் கண் வங்கிகளுக்கு தானமாக வழங்கப்பட்டு வருகின்றன.
நமது பிறப்பு, வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் அர்த்தமுள்ள ஒன்று என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
கண்களை அதிகபட்சம் 20 முதல் 30 நிமிடத்தில் அகற்றி விடுவார்கள். கண்களை எடுத்த பிறகு கண்களை எடுத்த அடையாளமே தெரியாது.
குடும்பங்களை அணுகி கண் தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ ஊழியர்கள் பயன்பெறும் வகையில் 2013ல் விஜயபாரதம் சுவையான, நாடக வடிவிலான கட்டுரையை வெளியிட்டிருந்தது. கார்னியா பாதிக்கப்பட்டதால், இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் பார்வையை இழந்திருக்கிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் 45 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்களில் 60 சதவீதம் பேர் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகள்.கண்களை தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே” என்று ஊக்குவித்து உறவினர்களின் சம்மதம் பெற்று கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம்.
கண் தானம் ஏற்கும்
சில சென்னை கண் வங்கிகள்
* அரசு கண் மருத்துவ மனை 044-2855 4540
* சி.யு. ஷா (சங்கர நேத்ராலயா) கண் வங்கி
044 2828 1919 * இந்திய கண் வங்கி (டாக்டர் அகர்வால்
கண் மருத்துவமனை) 044-2811 2811
* லயன்ஸ் கண் வங்கி
044-2855 3840
கண் தானம் செய்த கண்ணப்ப நாயனாரின் பூமி பாரத பூமி.
கண்தானம் செய்யும் குடும்பம் வழங்கும் உறுதிப் பத்திரம்
எங்கள் குடும்பத்தைச் சார்ந்த, கீழே கையொப்பமிட்டுள்ள அனைவரும் தனியாகவும் ஒன்று சேர்ந்தும் எங்கள் கண்களை தானமாக அளிக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். யார் ஒருவர் காலமானாலும் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மற்றவர்கள் உடனே மருத்துவரை அழைத்து மருத்துவ உபயோகத்திற்காக இரண்டு கண்களையும் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திச் சொல்கிறோம்.”
என்றால்…
* கண் தானம் செய்வதற்கு வயது, ஜாதி, இனம், மதம், மொழி, ஆண்-பெண் பாகுபாடு கிடையாது.
* ஒருவர் மரணமடைந்த ஆறுமணி நேரத்திற்குள் அவரது கண்களை தானமாக அளித்து எடுக்கப்பட வேண்டும்.
* மரணமடைந்தவரின் உடல் இருக்குமிடத்திற்கு வந்து மிகவும் எளிய முறையில் 20 முதல் 30 நிமிடத்திற்குள் கண்களை அகற்றி விடுவார்கள். கண்களை அகற்றிய பின் முகம் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டாது. ஈமச் சடங்குகள் செய்வதற்கான இடையூறோ அல்லது காலதாமதமோ ஏற்படாது.
* அனைத்து மதங்களும் கண்தானம் உட்பட அனைத்து உடல் உறுப்பு தானங்களையும் சிறந்த தானமாகப் போற்றுகின்றன.
* கண் கண்ணாடி அணிந்திருப்பவர்களும் தானம் செய்யலாம்.
* ரத்த அழுத்தம், ஆஸ்துமா, உடலில் மற்ற உறுப்புகளில் புற்றுநோய் வந்து இறந்தவர்களும் கண்தானம் செய்யலாம்.
* சக்ஷம் உள்ளிட்ட சங்க அமைப்புகள் கண் தான விழிப்புணர்வு இயக்கத்தை நாடு தழுவிய அளவில் நடத்தி வருகின்றன.