மகாராஷ்டிர அரசின் போக்குவரத்து ஊழியர்கள் பந்த்ரங் கடே, மனோஜ் சௌத்ரி, அமோல் மோலி போன்றோர் சில நாட்கள் இடைவெளியில் தற்கொலை செய்து கொண்டனர். பல மாதங்களாக சம்பளம் முறையாக தராததும் சம்பள குறைப்புமே இதற்குக் காரணம் என்பது வாக்குமூலங்கள், கைப்பற்றப்பட்ட கடிதங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கொரோனா சிகிச்சையளிக்க கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கும்கூட ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் மகா. அரசு தொழிலாளர்கள் பிரச்சனைக்கு செவி சாய்க்குமா?