ஒளரங்கசீப் வழியில் பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலமான கர்தார்புரில் அமைந்துள்ள சீக்கிய மதவழிபாட்டு ஸ்தலமான குருத்வராவுக்கு இந்தியாவிலிருந்து நிறைய ஆன்மீக பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.

கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தனது கடைசி 18 ஆண்டுகளை இங்குதான் கழித்தார். சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.

இந்த குருத்வாராவுக்கு மக்கள் சிரமமின்றி ஆன்மீக பயணம் மேற்கொள்ள வசதியாக தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் வரை ஒரு நெடுஞ்சாலை அமைக்க இந்தியா பாகிஸ்தான் நாடுகள் ஒப்புக்கொண்டு அதனை நிறைவேற்றியுள்ளன. இந்த சாலையின் மூலம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளில் உள்ள சீக்கிய மதத்தினர் பாகிஸ்தானிற்கும் இந்தியாவில் உள்ள புனித ஸ்தலத்திற்கும் சென்றுவர உதவியாக அமையும். இந்த நெடுஞ்சாலையில் பயணித்து கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்றுவர விசா கட்டணமாக 1406 என்ற தொகையை வசூலிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே, இந்தியாவில் ஆட்சிபுரிந்த ஒளரங்கசீப் ஹிந்துக்கள் மீது விதித்த கொடுமையான ஜசியா வரிக்கு இணையாக இது உள்ளது என்று சீக்கிய யாத்திரிகர்கள் கருதுகின்றனர். இதனால் இந்த கெடுபிடியான வசூலை மறைமுக ஜசியா வரியை நீக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை இரு நாடுகளில் உள்ள மக்களின் நன்மை கருதி இந்தியாவில் உள்ள சீக்கிய மதத்தலைவர்களும், சீக்கிய ப்ரபந்த கமிட்டி-யும் கோரியுள்ளது.