ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கிடுக்குப்பிடி

பாரதத்தில், 5,000க்கும் அதிகமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும், தங்கள் பெயரிலும் தங்கள் குடும்பத்தினரின் பெயரிலும் உள்ள அசையா சொத்துக்களின் விபரங்கள், அடமானம் வைத்து பெற்றுள்ள கடன்கள் உள்ளிட்ட விபரங்களை வரும் ஜனவரி 31க்குள் ‘ஆன்லைனில்’ தெரிவிக்க வேண்டும். விவரங்களை தாக்கல் செய்ய மத்திய பணியாளர் நலத்துறை தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.