குமரியில் விவேகானந்தர்க்கு நினைவு சின்னம் எழுப்பிய ஏக்நாத் ரானடே பற்றி சில நினைவுகள்

1925ல் நாகபுரியில் Dr ஹெட்கேவார் RSSஐ ஆரம்பித்த போது அவர் நடத்திய முதல் ஷாகாவில் ஸ்வயம் சேவகனாக தன்னை இணைத்துக் கொண்டவர் ரகுநாத் ரானடே. இவரின் கடைசி தம்பி ஏக்நாத் ரானடே. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவரை அண்ணன் ரகுநாத்தும் அண்ணியும் வளர்த்தனர். அண்ணன் வழியில் தம்பி ஏக்நாத்தும் தன்னை RSSல் 1926ம் ஆண்டு இணைத்துக் கொண்டார். இதே காலகட்டத்தில் தான் யாதவராவ் ஜோஷியும் சங்கத்துக்கு வந்தார். டாக்டர் ஜியின் அரவணைப்பில்,மேற்பார்வையில் வளர்ந்தார். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சங்க பிரசாரக்காக வந்தார். 1938ல் மஹா கோசலுக்கு (மத்திய பிரதேசம்) பிராந்த பிரச்சாரக்காக வந்தார்.
வங்கம், ஒரிசா, அஸ்ஸாம் ஷேத்ர பிரசாரக்காக  1950ல் உயர்ந்தார். அப்போது தான் வங்கதேச அகதிகளுக்கான புனர் வாழ்விற்கு இயக்கமும் தொடங்கினார். 1953 முதல் 1956 வரை அகில பாரத பிரசாரக் பிரமுக்காகவும் 1956 முதல் 1962 வரை சர் காரியவாஹ் (அகில இந்திய பொது செயலாளர்) பொறுப்பில் இருந்தார். சங்கத்திற்கு பணமோ, கட்டிடமோ கூடாது என்பது குருஜியின் கொள்கை. ஆனால் குருஜியின் 50ம் ஆண்டு பிறந்த தினத்தின் போது நாடு முழுவதும் குருஜியை tour போக சொல்லி, அதனை மையமாக வைத்து சங்கத்திற்கு கிட்டத்தட்ட 17லட்ச ரூபாய் வசூல் செய்து கொடுத்தார். அப்போது வாங்கப் பட்டது தான், தற்போதைய நாக்பூர் கார்யாலயம். அதை முன்னிட்டு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் தான் பசும்பொன் தேவர் திருமகன் குருஜியுடன் கலந்து கொண்டார்.
1962ல் சங்கத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொண்டு கல்கத்தா சென்று 1963 கடைசி வரை இருந்தார். அந்த ஆண்டு தான் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா. அவர் மீது கொண்ட அளவற்ற பக்தியால் சுவாமியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு Rising Call to Hindu Nation என்ற புத்தகத்தை எழுதி முடித்தார்.
1892, டிசம்பரில் சுவாமி விவேகானந்தர் 3நாட்கள் தியானம் செய்த கன்னியாகுமரி கடல் பாறையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏக்நாத்ஜிக்கு தோன்றியது. இது தொடர்பாக அப்போதே குமரியில் சங்க பிரச்சாரக்காக இருந்த வெங்கட்ராமன் ஜி மற்றும் சேஷகிரி ஜி (தற்போது நெல்லூரில் உள்ளார்) ஆகியோர் குமரி மாவட்ட அளவிலான முயற்சிகளை மேற்கொண்டு இருந்தனர். இது தொடர்பாக குருஜியை நேரில் சந்தித்து தன் விருப்பத்தை வெளிப் படுத்தினார். அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆசி அளித்து ஊக்கப்படுத்தினார். இது தொடர்பாக அப்போதைய மனிதவள மேம்பாடு மற்றும் கலாச்சார துறை அமைச்சர் திரு.ஹுமாயூன் கபிரை நேரில் சந்தித்து பேசினார். ஆனால் இது நடக்காத காரியம் என்று மறுத்து முதல் சந்திப்பிலேயே தட்டிக் கழிக்க முயன்றார். விடாப்பிடியாக ஏக்நாத் ஜி கேட்கவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் இருந்தால் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றார். அப்போது ஜன சங்கத்திற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் MPக்கள். சற்றும் மனம் தளராமல் நாடு முழுவதும் tour செய்து, பல கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து எடுத்துச் சொல்லி 300க்கும் அதிகமான MPக்களிடம் கையெழுத்துப் பெற்று பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், ஜன சங்கம், திமுக என பல கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றார். இதனிடையே கிருத்துவர்கள் இந்த பாறையில் சிலுவையை நட்டனர். அதையும் அகற்றி நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இதற்காக ஏக்நாத்ஜி செய்த வேலை பிரமிக்கத்தக்கது.
மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு மனைவி கமலா ஜோதிபாசு, அப்போதைய திமுக பொ செ அண்ணாதுரை, கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரம் போன்ற தலைவர்களை நினைவு மண்டபக் குழுவில் உறுப்பினராக வைத்துக் கொண்டு வேலைகளை செய்தார். மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை நேரில் சந்தித்து இது தொடர்பாக உதவி கோரினார். தன் கட்சி கொள்கைக்கு எதிராக நான் செயல் பட முடியாது. ஆனாலும் நிச்சயம் உதவுகிறேன் என்று சொல்லி தன் மனைவி கமலா ஜோதிபாசு மூலம் 10ஆயிரம் ரூபாய் கொடுத்தார். மேற்கு வங்க அரசு மூலமாகவும் உதவினார். கேரள முதல்வராக இருந்த அச்சுத மேனனும் உதவினார். விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்ட பின் அப்போதைய ஜனாதிபதி V V கிரி, தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். If Eaknathji ji sangh, I have no issues with sangh என்று இந்திரா காந்தியால் புகழப்படும் அளவுக்கு ஏக்நாத்ஜி செயல்பட்டார்.
ஏக்நாத்ஜி ஒரு அஜாத சத்ரு என்று முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலம் தன்னை நேரில் சந்தித்த R B V S மணியன்ஜியிடம் சொன்னார். அருணாசல பிரதேசம் பாரதத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக சங்கத்தின் உதவியை இந்திரா நாடினார். அதற்குப் பாலமாக இருந்தவர் ஏக்நாத்ஜி. ஏக்நாத்ஜி விவேகானந்தர் கேந்திரத்தின் பொது செயலாளராக செயல்பட்ட போது R B V S மணியன் ஜி அமைப்பு செயலாளராகவும் பின்னர் ஏக்நாத்ஜி தலைவரான பின் மணியன் ஜி பொ. செ ஆகவும் இணைந்து செயல்பட்டனர். அவர் எழுதிய புத்தகம் ஊருக்கு உழைத்திடல் யோகம் என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது. அதனை படிக்கும் யாருக்கும் சமுதாய, தேசியப் பணியில் அழற்சி என்பதே ஏற்படாது. பொது வாழ்க்கையை ஒரு வேள்வியாக நினைத்து வாழ்ந்த ஏக்நாத் ஜி 1982ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். 1980ம் ஆண்டு குமரி விவேகானந்தா கேந்திரா அறையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு விழுந்தார். திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி சென்றார். கிட்டத்தட்ட 2 மாதங்கள் கோமாவில் இருந்தவர் பின்னர் சுய நினைவு பெற்றார். பின்னர் 1981ம் ஆண்டு மீண்டும் சமுதயா வேலைக்காக சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டார். 1982ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று சென்னை திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. கன்னியாகுமரியில் இறுதிச் சடங்குகள் நடை பெற்றன. நம் சித்தாந்தத்திற்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவர்களையும் அரவணைத்து, அவர்களையும் தேசியப் பணியில் ஈடுபடுத்தி சாதித்துக் காட்டிய உத்தம ஸ்வயம் சேவகனின் பிறந்த தினம் (19.11.1914)…..