எந்தக் காட்டு நரிகள் இவை?

அன்புடையீர், வணக்கம்.

* எந்த ஒரு தேர்தல் வந்தாலும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் அமைப்பு வழக்கமாக கருத்து கணிப்பை வெளியிட்டு வருகிறது. பொதுவாக இவர்களின் கருத்துக் கணிப்பு நடுநிலையாக இல்லாமல் ஏதோ திமுகவிற்குத்தான் பெருவாரியான ஆதரவு இருக்கிறது என்பது போல  பொய்யான தோற்றத்தை உண்டாக்குவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) பெயரில் தமிழகம் முழுவதும் திமுகவே முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளார்கள். இந்த ஆண்டு லயோலா கல்லூரி முதல்வர் இந்தக் கருத்துக் கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த காலங்களிலும் நாங்கள் எவ்வித கருத்துக் கணிப்பும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். அதனால் கிறிஸ்தவ அமைப்புகள், பள்ளி கல்லூரி நிறுவனங்கள் தேர்தல் அரசியலில் பகிரங்கமாக ஈடுபட்டு வருகின்றன. அரசு இதுபற்றி தீவிரமான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஹிந்து கடவுள் ஸ்ரீ கிருஷ்ணனை அவதூறாக பேசிய வீரமணியை கண்டிப்பதற்குப் பதிலாக ஸ்டாலின் அவருக்கு வக்காலத்து வாங்குகிறார். ஹிந்துக்கள் தங்களது கோபத்தை ஓட்டளிப்பது மூலம் தெரியப்படுத்தினால் மட்டுமே இவர்களுக்கும் புத்தி வரும்.

* சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரியத்தைக் கொச்சைப்படுத்திய கம்யூனிஸ்டுகள் கோவை, திருப்பூர், மதுரை, நாகப்பட்டினம் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ஐயப்பமார்கள் இவர்களுக்கு தங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாமா?  வெறுமனே கோயிலுக்கு சென்று வருவது மட்டும் பக்தி இல்லை. நாங்கள் வழிபடுகிற தெய்வங்களை யாரும் அவமதிக்க அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் உண்மையான பக்தி.