எச்சரிக்கை: தேசவிரோத சக்திகளின் சதி

தேசியவாத அரசுகள் ஆட்சி செய்யும் நாடுகளில் கொந்தளிப்பும், பதற்றமும் உருவாவதை அண்மைக்காலமாக பார்த்து வருகிறோம். அதற்கு காரணம் என்ன? தேசியவாதத்தின் அடிப்படை தேசப்பற்று. தேசப்பற்று மிக்க அரசின் கீழ் எந்த நாடு இருக்கிறதோ, அந்த நாட்டில், ஊடுருவல்காரர்களின் கை ஓங்காது, தன்னுடைய நலனை மட்டுமே முன்னிறுத்தும் வல்லாதிக்க நாடு செல்வாக்கு செலுத்த முடியாது, நினைத்தபடி அந்நாடு ஒப்பந்தம் போட முடியாது.
ஊடுருவல்காரர்களுக்கும், வல்லாதிக்க நாட்டுக்கும் ஓர் ஒற்றுமையுண்டு. இரண்டுமே அந்நிய சக்திகள்தான். தேசியவாத அரசுகளை எதிர்ப்பது என்கிற புள்ளியில், இரண்டுமே இணைகின்றன. அவையிரண்டும், தேசியவாத அரசுகளை கவிழ்ப்பதற்காக புதிய இயக்கங்களை உருவாக்குகின்றன.
நீதிமன்றம் தொடங்கி அரசியல் கட்சிகள் வரை லாபி இருக்கும். கலவரங்களில் தொடங்கி, ராணுவப் புரட்சி வரை சாத்தியமான அனைத்தையும் செய்ய முயல்வார்கள். இவ்விதமாக அந்நிய சக்திகளால் களமிறக்கப்பட்டதுதான் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி”.
அபிஜித் தீப்கே திடீரென அமெரிக்காவிலிருந்து வருகிறார், ஜூலையில் ஜந்தர் மந்தரில் முதல் போராட்டத்தை தொடங்குகிறார். ஒரு காணொளியில் தீப்கே பற்றி பேசிய அமெரிக்கப் பாடகி மேரி மில்பென், “ஜார்ஜ் சோரஸிடமிருந்து கைநீட்டிப் பணம் வாங்கியவர் அபிஜித் தீப்கே. இதை அவரே தனது பதிவுகளில் ஒப்புக் கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
கரப்பான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சவுரவ் தாஸின் தந்தை ஒரு நேபாளி. இதுகுறித்து எத்தனையோ முறை கேள்வி எழுப்பியும், சவுரவ் தாஸ் பதிலளிக்கவில்லை. கரப்பான்களின் முக்கிய ஆதரவாளரான ராதே துருவ் என்கிற யூ ட்யூபர், ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.
கரப்பான்களுக்கு எதிரான காவல்துறையினர் நடவடிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையத்தை சேர்ந்த நிபுணர்கள் சிலர். அறிக்கை மூலம் கண்டிக்கின்றனர். அந்த அளவுக்கு கரப்பான்களுக்கு நெட் வொர்க் இருக்கிறது. ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சிக் கட்சியினர் போராட்டம் நடத்தியபோது, வேளாவேளைக்கு உணவு வந்துகொண்டே இருந்தது.
இவ்வளவு உணவு எப்படி வருகிறது என்று ஆராய்ந்தால் வங்கதேசம், கத்தார், துருக்கி ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது தெரிய வந்தது. இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்துப் பாருங்கள், கரப்பான்களின் பின்னால் இருப்பது யார் என்பது புலனாகும்.
கரப்பான்பூச்சிக் கட்சியை வழிநடத்து பவர்களை தேச விரோத சக்திகள் என்று சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. 2021 மே 25-ம் தேதி தி ஹிந்து ஆங்கில நாளேட்டின் இணையதளப் பக்கத்தில் மாலித் தீவு பற்றி ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தி என்னவெனில், “மாலித் தீவின் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது” என்பதாகும்.
அந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய ராணுவத்துக்கு tag செய்து பகிர்ந்திருந்தார், அபிஜித் தீப்கே. 2021லேயே ராணுவ ஆட்சிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தவர் தீப்கே. அப்படியென்றால் அவர் எப்படிப்பட்ட தேசவிரோதி, ஜனநாயக விரோதி என்பதை புரிந்துகொள்ளலாம்.
கரப்பான்பூச்சிக் கட்சியுடன் கைகோத்து செயல்படுபவர், நேஹா போரா. முன்னர் ஒரு முறை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேசியபோது, “உமர் காலித் வழியில் பயணிப்போம்” என்றார் நேஹா. “காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது” என்று கூறியவர் உமர் காலித். அவர் வழியை பின்பற்றுவதாக கூறிய நேஹா போரா, தேச விரோதியாகத்தானே இருக்க முடியும்!.
கரப்பான்பூச்சிக் கட்சியின் தீவிர ஆதரவாளரான பிரசாந்த் பூஷனை எடுத்துக் கொள்ளுங்கள். “இந்தியாவுடன் சேர்ந்து இருப்பதா இல்லையா என்பதை காஷ்மீர்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று 2011ல் கூறியவர். அதனால், தேசியவாதிகளிடம் உதை வாங்கினார். அப்படிப்பட்ட பிரசாந்த் பூஷனை “தேசவிரோதி” என்று கூறினால், அதில் என்ன தவறு இருக்க முடியும்?
2008ல், மும்பையில் நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்தவன் அஜ்மல் கசாப். அவனுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று கோரும் கருணை மனுவில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் பிருந்தா குரோவர். அவர்தான் கரப்பான்பூச்சிக் கட்சியின் பிரதான வழக்கறிஞர்.
ஆட்சி மாற்றம் என்பதே இலக்கு என்கின்றனர் கரப்பான்பூச்சிக் கட்சியினர். தேர்தலற்ற வழியில் ஆட்சி மாற்றத்தை விரும்பினால், அதற்கு பெயர் என்ன? அராஜகம் அல்லவா! இந்த நேரத்தில் மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கட்சி, சித்தாத்தம் – எல்லாவற்றையும் விட நமக்கு நம் நாடு முக்கியம். எனவே, நாட்டுக்கு எதிரான சக்திகளிடம் உஷாராக இருக்க வேண்டும். வீட்டுக் கரப்பான்களுக்கு மட்டுமல்ல – நாட்டுக் கரப்பான்களுக்கும் “ஹிட்” அடிக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.
கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்