எங்கே ஜேக் மா?

சாதாரணமாக வாழ்வை தொடங்கி சீனாவின் பெரும் பணக்காரர் ஆனவர் ஜேக் மா. அலிபாபா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். சமீபத்தில் சீனாவில் ஏற்பட்ட நெருக்கடிகள், நிதித்துறை சீரழிவுகள், பழமை சிந்தனைகள் குறித்து கேள்வி எழுப்பினார் ஜேக் மா. இதனால் அதுவரை சீன அரசின் செல்லப்பிள்ளையாக இருந்த ஜேக் மா அரசின் எதிரியானார். இதனால் கடந்த இரண்டு மாதமாக அவர் திடீரென தலைமறைவானார். அவர் எங்கிருக்கிறார், என்னவானார், உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என யாருக்கும் தெரியவில்லை. கம்யூனிசம் என்றால் என்ன, கொடுங்கோல் கம்யூனிச நாடான சீனாவில் அரசை எதிர்ப்பவர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.