கடந்த ஆகஸ்ட் மாதம் உடல் நல குறைவால் சிகிச்சை பலனின்றி மறைந்தார் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இவர் மிகவும் மனிதாபிமானம் கொண்டவர்,இவர் அமைச்சராக இருந்த சமயத்தில் தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளார்.
அவர் மறைந்த பிறகு அவர் வகித்த ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு ஓய்வூதியம் அவரின் குடும்பத்திற்கு வழங்குவார்கள். ஆண்டிற்கு 3 லட்சம் வரை வழங்கப்படும். இந்த ஓய்வூதியத்தை அருண் ஜெட்லி குடும்பத்தார் வேண்டாம் என கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இது குறித்து துணை குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் மறைந்த அருண்ஜெட்லி அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை 4 ஆம் நிலை பணியாளர்களுக்கு பிரித்து வழங்குங்கள் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.