உலகுக்கு உன்னத அவதாரமே, ராம அவதாரம்

மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து
உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். இத்தகைய உதாரண
புருஷரான ஸ்ரீ ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள்
உலகெங்கும் வழிபடுகின்றனர். அவரவர் சவுகரிஅப்படியும்,
இடத்துக்கேற்றபடியும், ஸ்ரீ ராமனின் ஜென்மத்தினத்தை ஒன்பது னாட்கள், பத்து
நாட்கள் என்றெல்லாம் மக்கள் உலகெங்கும் வருட வருடம் கொண்டாடி
வருகின்றனர். இந்தப் புண்ணிய நாளில் ஸ்ரீ ராமர் பிறந்த அயோத்யாபூமி, மற்றும்
ராமேஸ்வரம், பாடறச்சலாம், ஷீர்டி, சீதாதேவி பிறந்ததளமாகக் கருதப்படும்
பீகாரில் உள்ள சீதாமர்ஹி போன்ற பல இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா
கல்யாண மகா உற்சவ விழா அரங்கேறி வருகின்றன. ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம்
உள்ளிட்ட தென் பகுதி ஷேத்திரங்க ளிலும் பற்பல உற்சவங்களோடு ராமநவமி
சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம்
மேற்கொள்வர். தக்ஷிண அயோத்யா என பக்தியுடன் அழைக்கப்படும்
ஆந்திராவிலுள்ள ப த் ராசலம் கோவிலில் ஒன்பது நாள் விழா பக்தி
அதிர்வலைகள் விழா முடிந்தபின்னும் பல நாட்களுக்கு நீடிக்கும். பதினேழாம்
நூற்றாண்டில் பக்த ராமதாசரால் கட்டப்பட்டது பத் ரா சலம் ஆலயம். . இறுதி
நாளான ஒன்பதாம் நாள் சீதாராம கல்யாணம் என்று சீதா ராமர்களின் திருமண
நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ஸ்ரீ
ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த விழா
கொண்டாடப்படும் நேரம் கோடைக்காலம் எனபதால் விசிறி தானம் செய்வது
மிகவும் நல்லது. ராமநவமி விரதம் இருக்கும் போது ஸ்ரீராம ஜெயம் என்று 108
முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. ரா என வாய் திறந்து உச்சரிக்கும்போது

நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும், ம என உச்சரிக்க நம்
உதடுகள் மூடும்போது அந்தப்பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப் படுவதாகவும்
ஐதீகம்.

விரதம் இருக்கும் முறை:-
ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.
பூஜை அறையில் ராமர் படம், அல்லது ராமர் பட்டாபிஷேகம் படத்தை யும்,
ராமாயண காவியத் தையும் பூஜை யறையில் வைத்து வழிபட வேண்டும்.
படத்திற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின்
பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய
வேண்டும். ஸ்ரீ ராம கவசம், ராம அஷ்டோத்திர நாமாவளி , சம்க்ஷேப
ராமாயணம், ஏக ஸ்லோகி என்று பூஜையின் போது சிறார்களும் ஆர்வத்துடன்
சொல்லக்கூடிய அளவிற்கு எளிமையாக புத்தக வடிவில் சென்னையைச் சேர்ந்த
புவனேஸ்வரி வேதிக் சென்டர் ரவி அவர்கள் கொண்டு வந்துள்ளார்.
வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம்,
வடை, ஊறவைத்த பருப்பு போன்ற வற்றை நைவேத்யம் செய்து, பூஜையில்
கலந்து கொள்பவர்களுக்கு அவற்றைத் தர வேண்டும்.
காரோண வைரஸ் காரணமாக மக்கள் பெரும், குழுக்களாக சேர்வது தடை
செய்யப்பட்டுள்ளது. எனவே அடுக்கு வீடுகளில் உள்ளோர் சேர்ந்து பூஜை செய்ய
ஆசைப்பட்டால் தகுந்த இடைவெளி விட்டு உட்கார்ந்து செய்வது நலம்.
குழுவாகப் பலர் சேர்ந்து பூஜை இந்த வருடம் செய்வது தவிர்க்கலாமே. நிறைய
பிரசாத திரவியங்கள் செய்ய ஆசைதான். நிறைய பிரசாதம் செய்து விட்டோமே
என்று நினைப்பவர்கள், அவற்றை தத்தமது தெருக்கள், ரஸ்தாக்கள் உலவும்
மக்களை அழைத்து அவர்களுக்கு விநியோகிக்கலாம். திருவான்மியூரில் உள்ள

பெண்மணி ஒருவர் நிறைய பேர்களை சேர்ப்பது இந்த வருடம் சிரமம் என்று
தெரிந்து, தமது உறவினர் மற்றும் பக்தகோடிகள் ஆகியோர்க்கு கடந்த மாதமே
அச்சடித்த அழைப்பிதழை அனுப்பி விட்டார். வைரஸ் தொற்று சங்கதி
காரணமாக யாரையும் வராதீர்கள் என்று சொல்வது கஷ்டம். இருக்கும் இடத்தில்
பூஜை செய்வோம் அதே நேரத்தில் அனைவரும் ஸ்ரீராமபிரான் அருள் பெறுவோம்
என்கின்ற எண்ணத்தில் என்ன செய்தார் தெரியுமா ? தமது வீட்ட்டு ராமபிரான்
ஜனனோத்சவ வைபவத்தில், காஞ்சி பெரியவா அருளிய ஒரே ஸ்லோகத்தில்
ராமாயணம் என்கின்ற பாசுரத்தை வாட்சப்பில் பதிவு செய்து அந்த ஸ்லோகத்தை
அவரவர் வீடுகளில் நோட்டில் எழுத வைத்து விட்டார். அவர்களின்
பெயரைத்தாங்கிய தாளை தமது வீட்டு பூஜை அறையில் படம், பட்டாபிஷேக
புத்தகம், இவற்றோடு வைத்து அவர்கள் நலனிற்கும் சேர்த்து வழிபடுகிறார்.
இதனால் பலரும் ராமாயணத்தைப் படித்த புண்ணியம் அதே நேரம் மானசீகமாக
திருவான்மியூர் வீட்டு பூஜையில் தாமும் கலந்து கொண்டுவிட்டோம் என்கின்ற
திருப்தி. இந்த சுப வேலைதன்னில், ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008
முறை எழுத த் தொடங்கலாம். இந்த எழுத்துப் பயிற்சியை இன்று முதல் தினசரி
ஏ எழுதி நமது எண்ணங்களை போகஸ் செய்ய தகுந்த தருணம். ஸ்ரீராம என்ற
நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு தொடர்ந்தும், தினந்தோறும்,
உச்சரிக்கப் பழக வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம்
அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும்
விளையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம்
பெருகி வறுமையும், பிணியும் அகலும்.

இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால் …நன்மையும் செல்வமும்
நாளும் நல்கம் , தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் சிதைந்து
தேயும், நாடிய பொருள் கைகூடும்.