ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 40வது கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இன்று நடைபெற உள்ளது. மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், மாநிலங்களின் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, தெரிகிறது. கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பித்த ஊரடங்கால், மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய், வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் கடந்த, ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜி.எஸ்.டி., வருவாய் விபரங்களை, மத்திய நிதியமைச்சகம் வெளியிடவில்லை. இது தொடர்பாக, இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என, தெரிகிறது.