இந்து மதத்தை இழிவு படுத்த மாநாடு – எச்.ராஜா காட்டம்

சென்னை, சேத்துப்பட்டில் உள்ள, சங்கராலயத்தில், உலக பிராமண நல சங்கம் சார்பில், வங்கி வேலை வாய்ப்புக்கான பயிற்சி முகாம், நேற்று நடந்தது. அதில் பா.ஜ., தேசிய செயலர், ஹெச்.ராஜா ”இந்து மதத்தை இழிவாக பேச மாநாடு நடத்துகின்றனர்,” என பேசினார்.

புராணங்களில் கூறப்பட்ட காஞ்சிபுரம், சிறந்த நகரமாக இன்றும் போற்றப்படுகிறது. வரும், 12ம் தேதி, சென்னை காமராஜர் அரங்கில், ‘வேத மதம் வெறுப்போம்’ என்ற பெயரில், திருக்குறள் மாநாட்டை ஒரு கும்பல் நடத்துகிறது.இதில், இந்து மதத்தை இழிவாகப் பேச உள்ளனர்.ஆங்கிலேயர் காலத்தில், தமிழகத்தில், 17 ஆண்டுகள், நீதிக் கட்சி ஆட்சி நடத்தியது. அப்போது, ஒரு தமிழர் கூட முதல்வராக இருக்கவில்லை. தமிழர்களை அழித்தது, திராவிட கழக கும்பல்கள் தான். இந்த கும்பல், தமிழ் மொழி மற்றும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அது, நம் கடமை.பிரிவினைதமிழக வளர்ச்சிக்கு, ராஜராஜ சோழன் முக்கிய பங்காற்றினார். அவரது ஆட்சி காலத்தில், ஜாதி தொடர்பான எவ்வித பிரிவினைகளும் ஏற்பட்டதில்லை. ஆங்கிலேயர்கள், நம் நாட்டுக்கு வந்த பின் தான், ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், நம்மில் பிரிவினை ஏற்பட்டது. ஆனால், இங்குள்ள சிலரோ ராஜராஜ சோழனை தவறாக பேசி வருகின்றனர் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *