இந்து சகோதரர்களின் உணர்வுகளை மதித்து உத்தரபிரதேசத்தில் பசு மாடுகளை பலியிட வேண்டாம் – முஸ்லிம்களுக்கு தியோபந்த் மதரஸா கோரிக்கை

இந்து சகோதரர்களின் உணர்வு களை மதித்து பசு மாடுகளை பலியிட வேண்டாம் என முஸ்லிம்களுக்கு உத்தரபிரதேசத்தின் தியோபந்த் மதரஸா வேண்டுகோள் விடுத் துள்ளது. திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக இந்தக் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

ஈத் உல் அஸா எனப்படும் பக்ரீத் பண்டிகை திங்கள்கிழமை நாடு முழுவதிலும் கொண்டா டப்படுகிறது. இதில், அல்லாவின் பெயரால் முஸ்லிம்கள் ஆடு, எருமை, ஒட்டகம் ஆகிய விலங்கு களை பலி கொடுப்பதை வழக்க மாக கொண்டிருக்கிறார்கள். இதன் இறைச்சியை மூன்று பங்காக்கி ஒன்றை ஏழை களுக்கும், மற்றொன்றை தம் உறவினர்களுக்கும் கொடுத்து மூன்றாவது பங்கை உண்டு மகிழ்கிறார்கள்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பசுமாடு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. இந்துக் கள் இதை புனிதமாகக் கருதுவ தால் அம்மாநில அரசுகள் பசுமாடுகளை வெட்டுவது தண் டனைக்குரியதாக சட்டம் இயற்றி யுள்ளன. ஆனால், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எந்த தடையும் இல்லை. இதனால், நாட்டின் பழமையான முக்கிய மதரஸாக் களில் ஒன்றான ஜாமியா ஷேக் உல் ஹிந்த் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பசு மாடுகளை முஸ்லிம்கள் பலியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.