இந்தியாவுக்கு இஸ்ரேல் தூதரகம் வாழ்த்து

உலகம் முழுவதும், ‘நண்பர்கள் தினம்’ நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின், டில்லி துாதரக அலுவலகம் சார்பில், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.டுவிட்டரில் வெளியிடப்பட்ட பதிவில், ‘இந்தியாவுக்கு, நண்பர்கள் தினம், 2019ன் வாழ்த்துக்கள்; நமது வலுவான நட்பும், கூட்டாண்மையும் தொடர்ந்து வளர்ந்து, அதிக உயரங்களை தொடும்’ என, கூறப்பட்டிருந்தது. அத்துடன், ஷோலே என்ற ஹிந்தி திரைப்படத்தில் வரும், ‘இந்த நட்பை நாங்கள் உடைக்க மாட்டோம்’ என்ற பொருள் தரும், ‘யே தோஸ்தி ஹம் நஹி டோடெங்கே’ பாடல் வரியையும் இணைந்து, டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோர் கைகுலுக்கி, அரவணைக்கும் புகைப்படங்களின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேலில், செப்., 17ல், தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நேதான்யாகுவுடன், பிரதமர் மோடி இருக்கும் படம் இடம் பெற்றுள்ள பிரமாண்ட, ‘பேனர்’ இஸ்ரேலின், டெல் அவிவ் நகரில், மிக உயர கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்டுஉள்ளது.