இதுதான் கமல்

தனது கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று பேசும் கமல் ஹாசன், ஹிந்து மத நம்பிக்கை களைப் தொடர்ந்து புண்படுத்தி வருகிறார். ‘சாமி கூடத்தான் கம்மியா டிரஸ் போட்டிருக்கு. சில சாமி டிரஸ்ஸே போடுறது இல்ல. அப்ப தோணாதது எங்க அக்காவையும் என் தங்கச்சியையும் பாக்கும்  போது எப்பிடி உனக்கு தோணுது?’ என்று பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனக்கு தரப்பட்ட பூர்ண கும்ப மரியாதையை நிராகரித்தவர் கமல். தான் கிறிஸ்தவ கலை, தகவல் தொடர்பு மையத்தில் இணைந்த பின்னர் ‘நற்செய்தியை’ பரப்பியதாக சில வருடங்களுக்கு முன், பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு வழங்கிய பேட்டியிலும் கமல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.