பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதித்து வரும் பாரத அரசு கொரோனா போன்ற தற்போதைய இக்கட்டான சூழலிலும் தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காக்க தவறவில்லை. ஆயுஷ்மான் பாரத் ஆரம்ப சுகாதார ஆரோக்கிய மையங்கள் பாரதம் முழுவதும் தொடங்கப்படும் என பாஜக அரசு கூறியிருந்தது. 1.5 லட்சம் மையங்கள் 2022ஆம் ஆண்டுக்குள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 50025 ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் பாரதமெங்கும் நிறுவப்பட்டுள்ளன. இது அரசின் சுகாதாரத்துறையில் ஒரு மைல்கல். தன் இலக்கில் மூன்றில் ஒரு பகுதியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.
இலவச விரிவான ஆரம்ப சுகாதார சேவையை வழங்கும் இந்த மையங்கள் குழந்தை பிறப்பு, பெண்களின் நோய்கள், குழந்தைகள், ஊட்டசத்து குறைபாடு போன்றவற்றை கையாளும். மேலும் பொதுவான நோய்கள், தொற்று நோய் தடுப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தும். இந்த மருத்துவ நிலையங்களில் இதுவரை 28 கோடிக்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர். அதில் 53% பெண்கள்.
இது தவிர ஏழை மக்களுக்கு உதவ, பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குடும்பத்துக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வசதியும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவ இ-சஞ்சீவினி எனும் இலவச தொலைதூர மருத்துவ சேவையும் கொரோனா பொதுமுடக்க காலத்தில் வழங்கப்பட்டது. இந்த தொலைதூர மருத்துவ சேவையில் அதிகம் பயன் பெற்ற மாநிலம் தமிழகம்.
இதை போன்ற நாட்டு நடப்புகள் குறித்து எதுவும் தெரியாமல் 5 ரூபாய்க்கு மருத்துவம், ஒரு ரூபாய்க்கு விமான சேவை கேட்கும் நடிகர்கள் பின்னால் சிறு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது!