ஆக்கிரமிக்கும் ஆக்டோபஸ்

சமீபத்தில் நாம் பார்த்த ஒரு முகநூல் செய்தி நம்மை மிகவும் சிந்திக்க வைத்தது. நாகர்கோயிலை சேர்ந்த ஜேன் எட்வர்ட் எனும் பெண்மணி தற்போதைய சென்னை ஐ.ஐ.டியின் பதிவாளராக உள்ளார். இதைதவிர பொறியியல் துறையின் நிறுவனத் தலைவர் ராபின்ஸன்.  நிர்வாகத்துறை டீன் கோஷி வர்கீஸ். திட்டமிடல்துறை டீன் லிக்கி பிலிப். மருத்துவத்துறை தலைவர் ரிபெக்கா. தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்காரியா என அனைத்து உயர் பதவியினரும் கிறிஸ்தவர்கள்.

இந்த பதவிகளில் இவர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டது தன்னிச்சையாக நடந்தது என கருதுகிறீர்களா? அப்படியெனில், சற்று இதையும் படித்துப்பாருங்கள். சென்னை ஐ.ஐ.டியின் 600 ஏக்கர் நிலத்தை முன்பு சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் உள்ளூர் சுயஉதவி குழுவினர். ஆனால், இந்த பணிக்கு தற்போது நாகர்கோயிலில் உள்ள ‘கிரியேஷன்ஸ்’ எனும் நிறுவனம் நியமிக்கப் பட்டுள்ளது. ஐ.ஐ.டியில் உள்ள விலங்குகளை உள்ளூர் மக்கள் பராமரித்து வந்தனர். ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டு, நாகர்கோயிலை சேர்ந்த ‘ஜீவகாருண்யா டிரஸ்ட்’ எனும் நிறுவனம் பணியமர்த்தப்பட்டுள்ளது. இவற்றில் எவ்வித டெண்டர் நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இந்த நியமனங்களால், உள்ளூர் ஏழைகளின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன. விலங்குகளை பாதுகாத்து வந்த ப்ளூகிராஸின் தன்னார்வலர்கள் தடுக்கப்பட்டனர். சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல், 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிறிஸ்தவ நிறுவனங்களை முறைகேடாக நியமித்தது ஏன், அனைத்து பதவிகளிலும் கிறிஸ்தவர்களையே நியமித்தது ஏன், குறிப்பாக நாகர்கோயிலை சேர்ந்தவர்களே எப்படி அதில் அதிகம் இடம் பெற்றுள்ளனர் என்பது போன்ற கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை.