மேற்கு வங்க மாநிலத்தில் ஹிந்துக்கள் விழித்துக் கொண்டதால், மே மாத சட்டமன்றத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்றது; பங்களாதேஷ் ஜிகாதிகளின் துணையோடு 15 ஆண்டுகளாக திருணமூல் காங்கிரசின் மமதா பானர்ஜி நடத்திய காட்டாட்சி காணாமல் போனது. அந்த மாநிலத்தின் மாற்றத்திற்கு வேறு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஹிந்து எழுச்சி தான் மூலக்காரணம் என்பதை தமிழர்களும் புரிந்து கொள்வது மிக நல்லது.
ஒரு வருடம் முன்பே, மேற்கு வங்க மாநிலத்தில் ஹிந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜகவும் 40க்கும் மேற்பட்ட ஹிந்து அமைப்புகளும் களம் இறங்கின. ஹிந்து சமூகத்தை ஒன்றிணைப்பதை வலியுறுத்தி பல்வேறு தலைவர்களின் சுற்றுப் பயணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வங்கத்தை பீடித்த கிரகணத்துக்கு தீர்வு காணும் வகையில் சங்க சகோதர அமைப்புகள், பாஜக தலைவர்கள் மற்றும் அதன் இணை அமைப்பு தலைவர்களுடன் உயர்மட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்த தொடங்கி இணக்கமான உறவுகளை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஹவுராவில் 2025 மார்ச் 2 அன்று நிறைவடைந்த இரண்டு நாள் கூட்டம், திருணமூல் காங்கிரஸின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கான வழிகளைக் கண்டறிவதில் முழு கவனம் செலுத்தியது.
மேற்கு வங்கத்தின் முக்கியமான பண்டிகையான துர்கா பூஜைக்கு பின்னர், மாநிலத்தின் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஹிந்து அமைப்புகள் ஹிந்து ஒற்றுமை மாநாடுகளை நடத்தியதன் மூலம், ஹிந்து வாக்குகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றின. நிர்வாக ரீதியாக பாரதிய ஜனதா கட்சியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தேர்தல் முடிவைப் பாதிக்கக்கூடிய மூன்று மந்திரங்களை வாக்காளர்களிடம் ஹிந்து அமைப்பினர் ஊக்குவித்தார்கள். முதலில் வாக்களியுங்கள். பிறகு காலை உணவு உண்ணுங்கள் (Pehle matdan, phir jalpan): பல ஹிந்து வாக்காளர்கள் வாக்களிப்பதை தாமதமான நேரங்களுக்குத் தள்ளிப்போடுவதாகவும், அதனால் பல சமயங்களில் வாக்களிக்காமலேயே விட்டுவிடுவதாகவும், சங்க வட்டாரம் தெரிவித்தது. “வானிலை மோசமடைந்தால், அவர்கள் வாக்களிக்க செல்லாமலேயே போகலாம். சில சமயங்களில், அவர்கள் வாக்குச்சாவடிகளை அடைவதற்கு முன்பே கள்ள வாக்குப்பதிவு நடப்பதாக தகவல்கள் வருகின்றன. அனைத்து ஹிந்துக்களும் அதிகாலையில் வாக்களித்தால், இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்,” என்று வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பல ஆண்டுகளாகவே, முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சிக்கும், பின்னர் இடதுசாரிகளுக்கும், தற்போது திருணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாக்களித்து வந்தார்கள். வாக்களிக்கும் முஸ்லிம்களில் பெருவாரியானவர்கள் பங்களாதேஷ் நாட்டிலிருந்து ஊடுருவியவர்கள். இதன் காரணமாக நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பது தெரிந்தும், மேற்படி கட்சிகள், முஸ்லிம்களை தாஜா செய்யும் போக்கே நிலவியது. இதன்காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே, ஹிந்து வாக்காளர்களின் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு வாயிலாக மமதாவிற்கு எதிரான ஒரு தெளிவான மாற்றத்தை உருவாக்க முயன்றார்கள்.
மால்டா, முர்ஷிதாபாத் போன்ற பகுதிகளில் மீண்டும், மீண்டும் ஏற்படும் மதக்கலவரப் பதற்றங்கள், மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்த ஹிந்துக்கள், அச்சத்தின் காரணமாக அஸ்ஸாமிற்கும் மற்ற சில மாநிலங்களுக்கும் வெளியேறினார்கள். சந்தேஷ்காலி போன்ற வேதனையளிக்கும் சம்பவங்கள் மற்றும் ஆர்.ஜி. காரில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை என இந்தத் தேர்தலின் பின்னணி மிகவும் கவலையளிப்பதாக அமைந்துள்ளது. இவை தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல நாட்டின் பாதுகாப்பும், ஹிந்துக்களின் பாதுகாப்பும் சம்பந்தப்பட்டது என ஹிந்துக்களின் மனநிலையை மாற்ற முடிவு செய்யும் வகையில் பிரச்சாரங்கள் வடிவமைக்கப்பட்டன.
2026ல் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரச்சாரமானது, வங்காளத்தில் அக்கட்சி இதுவரை மேற்கொண்டதிலேயே மிகவும் திட்டமிட்ட ஒரு கலாச்சார மறுசீரமைப்புச் செயலாகும். அக்கட்சி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பதை மட்டுமல்லாமல், ‘ஜெய் மா காளி’ மற்றும் ‘ஜெய் மா துர்கா’ போன்ற முழக்கங்களையும் எழுப்பத் தொடங்கியுள்ளது. அது தாகூர், விவேகானந்தர், சைதன்ய மகாபிரபு மற்றும் ராஜ்வங்ஷி சின்னமான தாக்கூர் பஞ்சனன் பர்மா ஆகியோரின் மரபுகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. அனுராக் தாக்கூர் கேமரா முன்னிலையில் மீன் சாப்பிட்டு, மம்தாவின் பொய் பிரச்சாரத்தை முறியடித்தார்.
வட மாவட்டங்களில் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் முயற்சி மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சங்கத்தின் முக்கிய அதிகாரி, சிலிகுரிக்குச் சென்று சுமார் 7,500 இளைஞர்களைத் திரட்டியதைத் தொடர்ந்து, அந்த அமைப்பு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் அவர்களுடன் இணைந்து சமூக ஈடுபாட்டில் தீவிரமாக ஈடுபட்டு பழங்குடியினரின் நம்பிக்கையை பெற்றது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் 40-க்கும் மேற்பட்ட இணை அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஹிந்துக்களிடையே தனது நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநாட்டும் நோக்கில், ஸ்ரீராமநவமி, ஹனுமான் ஜெயந்தி, ெஜன்மாஷ்டமி போன்ற ஹிந்து மத நிகழ்வுகளைப் பெரிய அளவில் அனுசரித்து, அவர்களுடன் கலந்துரையாடி, ஹிந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியது. இது ‘புதிய ஹிந்து வாக்காளர்களை’ ஈர்க்கவும், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு உதவவும் வழிவகுக்கும் என ஆர்.எஸ்.எஸ்- திட்டமிட்டு செயல்படுத்தியது.
ஹிந்துக்களின் அவலநிலை’ குறித்த பிரச்சினை, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ‘கூடுதல்’ ஹிந்து வாக்குப் பங்கைப் பெற்றுத் தருவதில் ஆர்.எஸ்.எஸ் கவனம் செலுத்தியது. இதற்குக் காரணம், மேற்குவங்கத்தில் ஆளும் தரப்பு, மாநிலத்திற்குள் “ரோஹிங்கியாக்கள் மற்றும் முஸ்லிம்களின் சட்டவிரோத நுழைவைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும். இதன்காரணமாக மேற்குவங்கத்தில் ஏற்கெனவே 29-−30% ஆக உள்ள சிறுபான்மையினரின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, ஆளும் கட்சிக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என ஆர்.எஸ்.எஸ் கருதியது. இதன் காரணமாகவே ஹிந்து வாக்கு ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியது.
அஸ்ஸாம் – 2026 தேர்தலுக்கு முன்பே இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க முனைந்தது. ஒன்று நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு, ஊடுருவியவர்களை வெளியேற்றுவது, இரண்டாவது, சட்ட விரோதமாக ஆக்கிரமித்த நிலங்களை மீட்டு ஹிந்துக்கள் வசம் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு வழங்குவது. இது ஹிந்து வாக்குகளை ஒருங்கிணைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
பாஜக முயற்சியின் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வாழும் மட்டுவா சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தியதின் காரணமாக, தற்போது நடந்துள்ள தேர்தலில் வட வங்காளம் பகுதியில் அமைந்துள்ள எல்லை மாவட்டங்களில் குறிப்பாக கூச்பெஹார், உத்தர், தின்காட்டா, சிதல்குச்சி போன்ற தொகுதிகளில் வெற்றிக்கு வித்திட்டது. மேலும் எல்லைப்புற மாவட்டங்களில், ஊடுருவல் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்காளர்கள் மாறியதாலும், பாஜகவின் வெற்றிக்கு வழி வகுத்தது. மேலும், பாரம்பரியமாக கம்யூனிஸ்ட் அல்லது திருணமூல் காங்கிரஸை ஆதரித்த உயர் மற்றும் நடுத்தர வர்க்க ஹிந்துக்கள் ( Bhadralok ) இம்முறை தேசியவாதம் மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் பாஜகவிற்கு வாக்களித்தார்கள். இவ்வளவு பெரிய வெற்றிக்கு முழுமுயற்சிக்கு காரணமாக பிரதமர், உள்துறை அமைச்சர் தொடர் பிரச்சாரம் செய்ததும், சங்கத்தின் அயராத உழைப்பும் மேற்குவங்க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியும் பெரும் வெற்றியை தந்தது.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
சட்டமன்ற உறுப்பினரான சாமானியர்
மேற்கு வங்கத்தின் அவுஸ்கிராம் தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கும் கலிதா மாஜி, வறுமை துரத்தினாலும், உழைப்பைக் கைவிடாமல், வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே தன் அரசியல் கனவுகளையும் நனவாக்கியிருக்கிறார். கடந்த 2021 தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஆனாலும் சோர்ந்து விடாமல், வீட்டு வேலை செய்துகொண்டே தன் தொகுதி மக்களுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு, தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
மதசார்புள்ள காங்கிரஸ்
அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள 19 எம்.எல்.ஏ.க்களில், ஒரே ஒரு ஹிந்து மட்டுமே உள்ளார். மீதி 18 எம்.எல்.ஏ.க்கள் முஸ்லிம்கள்.
கேரளாவில் மொத்தம் 35 முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகி உள்ளனர். அவர்களில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றுள்ள முஸ்லீம்கள் 30 பேர் ஆவர். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள இருவரும் முஸ்லீம்கள் ஆவர்.
நிறைவேறிய சபதம்
மேற்கு வங்கத்தில் 1998ல் இடதுசாரிக் கட்சிகள் வலுவான ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில், அப்போது பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி முகவராக இருந்த அங்கூர்பாலா ஷா, அரசியல் எதிரிகளிடமிருந்து கடுமையான இன்னல்களையும், கொடுமைகளையும் சந்தித்தார். மேற்கு வங்கத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வரும் வரை காலணிகள் அணியப் போவதில்லை என ஒரு முடிவை எடுத்தார்.
28 ஆண்டுகளாக, வெறுங்காலுடன் வாழ்ந்தார். சுட்டெரிக்கும் கோடை, பருவமழை, மற்றும் கிராமப்புற நிலப்பரப்பின் கடுமை என அனைத்திலும், தனது சபதத்தை உறுதியுடன் கடைப்பிடித்தார். வெறுங்காலுடன் நடப்பது அவருக்கு வெறும் உடல் சார்ந்த செயலாக மட்டும் இருக்கவில்லை; அது அவரது அரசியல் நம்பிக்கை, அவரது மனவுறுதி மற்றும் அவர் அனுபவித்த துன்பங்களுக்கு எதிரான அவரது எதிர்ப்பு ஆகியவற்றின் ஒரு நிலை. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, மேற்கு வங்காளத்தில் பாஜக அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைந்த உடன் அங்கூர்பாலா ஷா காலணி அணிந்துள்ளார்.