படத்தில் இருப்பவர்கள் பந்து பிரகாஷ் பால் (35) மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர். இவரது மனைவி மண்டல் பால் (30), இவர் எட்டு மாதக் கர்ப்பிணியாகவும் இருந்தார். மகன் அங்கன் பால் (8).
இவர்கள் இன்று உயிருடன் இல்லை. மூவரும் கொடூரமான முறையில் கடந்த புதன்கிழமை (10.10.19) கழுத்தறுத்துக் கொல்லப்பட்டனர்.
இவர் செய்த குற்றம் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொண்டராக இருந்தது.
இதுதான் ஜனநாயகமா?
இதுதான் மதச்சார்பின்மையா?
இதுதான் சகிப்புத்தன்மையா?
இதுதான் முற்போக்கா?
இதுதான் நாகரிகமா?
இதுதான் கருத்து சுதந்திரமா?
மேற்கு வங்க மாநிலம் அரசியல் படுகொலைகள், மதவெறிக் கொலைகள் நிகழும் படுகளமாகி விட்டது. அநாகரிகப் படுகொலைகளில் கேரளத்தை விஞ்சிவிட்டது.
இந்தக் கொடுமையை பாஜக தவிர்த்த எந்த அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை.
இதைக் கண்டித்து எந்த அறிவுஜீவியும் ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுதவில்லை.
இதை எந்த ஊடகமும் இதுவரை விவாதிக்கவில்லை.
இவர்களைக் கொன்ற கொலையாளிகளை பார்த்து அரசு அஞ்சுகிறதா? அல்லது அவர்களுக்கு உதவுகிறதா?
நாம் வாழ்வது இந்தியாவில் தானா?
நாம் உண்மையில் மனிதர்கள் தானா?