அர்த்தமுள்ள ஹிந்து மதம்

“பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் நாத்திக வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல்,அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!” என்று தனது மனக் கதவை முழுவதும் திறக்கிறார் கவிஞர் தமது வனவாசம் என்கின்ற படைப்பில்.

பிர்லாவைப் போல் சம்பாதித்து ஊதாரியைப் போல செலவழித்து பல நேரங்களில் பிச்சைக்காரனைப்போல ஏங்கி நிற்கும் வாழ்க்கையே தன வாழ்க்கையாக இருந்தது என்ற உண்மைய மட்டுமல்ல ஒரு பிரஞையாற்ற வாழ்க்கையை 1950 லிருந்தே தான் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் அப்பட்டமாகக் கூறுகிறார்.

அவர் ஒருவருக்குத்தான் வாழ்க்கையில் எல்லாமே மிக மோசமாக வாய்த்த கதைகளை யும் நினைவு கூற்கிறார்.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?இந்த நாலரை கோடி மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது. இங்குள்ள பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்!ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள் என்றும் சாடுகிறார். கவிஞரை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமை கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம்.நம்புகிறவனை தடுப்பதற்கு
இவர்கள் யார்? என naathigam pesuvoraiச் சாடவும் தயங்கவில்லை கவிஞர். அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள் தனக்கு வந்த நிலை பின்னாளில் எவருக்கும் வரக்கூடாது என்று எண்ணத்தின் முழு வடிவம் தான் அவரது அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் பொக்கிஷம்.என்னே உயரியதொரு நோக்கம்?!!. சான்றாக தன் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுக்கள் கவிஞர் படிப்போர் முன் வைக்கிறார். இந்து மதத்தின் புனிதத்தையும், மனித வாழ்விற்கு அதன் பங்களிப்பையும் உணரும் காலத்திற்கு முன்னர் வரைமுறையற்ற பொதுக்கூட்டங்களுக்கு வாழ்வையும் வசதியையும் வீணடித்துக்கொண்டு செல்லத் தொடங்கியதையும் நினைவு கூறுகிறார். நாணயம், இரக்கம்,
மனிதாபிமானம் பற்றியெல்லாம் இந்து மதம் போதித்த அளவிற்கு மற்ற மதங்கள் எல்லாம் போதிக்கவில்லை என்று இந்து மதம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டிருப்பதைப் பற்றியெல்லாம் கவிஞர் ஆத்திகத்தின் மீது ஆர்வம் கொண்டபின்னர்தான் தெரிந்து கொண்டார். பத்து பேரை நல்லவராக்குவது போல் புனித பணி உலகத்தில் வேறெதுவும் இல்லை . அதற்க்கு இளைஞர்கள் கைக்கொள்ளவேண்டிய ஒரே நம்பிக்கை மத நம்பிக்கை என்றும், மதமும், அது காட்டும் தெய்வமும், அதன் வழி வந்த அவதார புருஷர்களும் ஒரு நேர்மையான ஞானம் மிக்க சமுதாய செயல்பாட்டாளர்கள் என்று முழங்குகிறார். ஆன்மிகத்துக்கு திரும்பிய அவரது மன வாசம் தொடங்கியது 1961 ஏப்ரல் மாதம் பத்தாம் தேதியிலிருந்து தான் என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

Image result for கவிஞர் கண்ணதாசன்"

கண்ணதாசன்