அரசியல் ஷரத்து 370 சிறுபான்மையினருக்கு எதிரான ஷரத்து

கடந்த 70 வருடங்களாக, காஷ்மீரில் இனவெறி, மேலாதிக்கம், பெண்கள் எதிர்ப்பு, தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரானது அரசியல் ஷரத்து 370.  இந்திய அரசின் கௌரவத்தை குறைத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் இஸ்லாமிய பிரிவினா ஷியா பிரிவினரும் துன்பத்திற்கு இந்த ஷரத்து வழி வகுத்துள்ளது.      சிறுபான்மை கமிஷன் அமைக்காத ஒரு மாநிலம் ஜம்மு காஷ்மீர்  மாநிலமாகும்.  மத்திய அரசு வழங்கும் நிதியானது, ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை.  சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் கூட, இஸ்லாமியர்களுக்கே, 70 வருடங்களாக வழங்கப்பட்டு வந்துள்ளது.  மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தகவல் உரிமை சட்டம் மற்றும் கல்வி கற்கும் உரிமை உள்ளது.  ஆனால் ஜம்மு காஷ்மீர் வாழும் சிறுபான்மையினர், மத்திய அரசு வழங்கும் நிதியை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்ற உண்மையை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள இயலாது.

          அரசியல் ஷரத்து 370 மற்றும் 35ஏ பிரிவு நீக்கப்பட்டதால், பெண்களுக்கு சம வாய்ப்பு, சொத்துக்களுக்கு சம உரிமை கிடைப்பதுடன், ஜம்மு , லடாக் மற்றும் கார்கில் பகுதிகளில் வாழும் சிறுபான்மை ஷியாக்கள், இந்துக்கள், புத்த மதத்தினர்,  முழு பாதுகாப்பும், மத்திய அரசின் நிதியும், தங்களின் பகுதிகளின் வளர்ச்சியும் அடையும் என நம்புகிறார்கள்.  கடந்த 70 வருடங்களாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆண்டவர்களின் ஆட்சியில் மத்திய அரசின் நிதி முழுவதும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கே செலவிடப்பட்டது.  சிறுபான்மையின மக்களின் நலனுக்கு வழங்கப்படும் நிதி கூட, பள்ளத்தாக்கில் உள்ள இஸ்லாமியர்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றது.   இதற்கு முதன்மையான காரணம்,  காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையின கமிஷன் அமைக்கப்படவில்லை.

          ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அதிக வரி வருவாய் வருவது, ஜம்மு மற்றும் லடாக் பிராந்தியங்களில்.  ஆனால் வரி வருவாயில் அதிக அளவு செலவிடப்படும் பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பதும்,  மத்திய அரசானது மாநிலத்திற்கு கொடுக்கும் நிதியில் கூட பெருமளவு, பள்ளத்தாக்கிற்கே செலவிடப்படுகிறது.   மத்திய அரசானது, ஒரு சதவித மக்கள் தொகை கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 10 சதவீத நிதி வழங்குகிறது.  2011-ல் உ.பி.க்கு வழங்கிய நிதியானது, ஒரு தனி நபருக்கு ரூ 4,300 என்ற அளவிலும்,  காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு தனி நபருக்கு ரூ91,300 என்ற அளவிலும் நிதி வழங்கியுள்ளது.  இவ்வாறு பெறப்படும் நிதி பெரும் பங்கு பள்ளத்தாக்கில் மட்டுமே செலவிடப்படுகிறது.  மத்திய அரசு வழங்கும் நிதியை எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதை தணிக்கை செய்ய மத்திய தணிக்கை குழுவிற்கு அதிகாரம் கிடையாது என்பதால் வெறும் 15 சதவீதம்  சன்னி இஸ்லாமியர்களுக்கு சலுகைகள் அனைத்தும் கிடைக்கின்றன.

           1934-ல் துவக்கப்பட்ட Ladakhi Buddhist  Association அமைப்பினர்,  காஷ்மீர் மாநிலத்துடன் லடாக்கை இணைக்க கூடாது என  1989-ல்  போராடத்தை நடத்தினார்கள்.  பள்ளத்தாக்கில் பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் தாக்குதல்களை நடத்திய போது கூட,  லடாக்கில் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்கள், லடாக்கை விட்டு வெளியேற வேண்டும் என கலக குரல் எழுப்பினார்கள்.  இதன் விளைவாக காஷ்மீர் முஸ்லீம்கள் மற்றும் லே மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களின் பொருளாதார புறக்கணிப்புகள் ஏற்பட்டன. இந்த புறக்கணிப்பு 1992-ல் விலகிக் கொள்ளப்பட்டது.  1995 ஆம் ஆண்டில் லடாக்கில் ஒரு தன்னாட்சி மாவட்ட கவுன்சில் உருவாக்க ஒரு சட்டம் இயற்றப்பட்டது, இது ஒரு தனி அடையாளத்திற்கான அமைப்பாகும், இதனால், அவர்களின் கோரிக்கையை மேலும் அதிகரித்தது  மாநிலத்தின் கொள்கைகள் காஷ்மீரை மையமாகக் கொண்டே கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன  மற்றும் இது ஜம்மு, லடாக்கிற்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றுக்கு பொதுவான ஒன்றும் இல்லை, காஷ்மீரில் உள்ள அனைத்து சட்டங்களும் லடாக்கிற்கு பொருத்தமற்றவை.  காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்லூரிகள், பள்ளிக்கள் மூடப்பட்டால், ஜம்மு மற்றும் லடாக்கிலும் மூடப்பட வேண்டும்  என ஆட்சியாளர்கள் உத்திரவிட்ட சம்பவமும் உண்டு.

          காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுத்த சிறப்பு அந்தஸ்தின் காரணமாக, வடக்கு காஷ்மீரில் முதல் முறையாக கல் வீசியவர்கள் எனக் கூறப்படும் 390 பேருக்கு முதலமைச்சர் பொது மன்னிப்பு வழங்கியிருப்பது  ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில்  பதட்டங்களை அதிகரித்துள்ளது   மறுமுனையில், மேற்கு பாக்கிஸ்தானில் இருந்து இந்து மற்றும் சீக்கிய அகதிகள், மேலும்  1990 ல் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த காஷ்மீர் பண்டிதர்கள், முற்றிலும் புறக்கணிப்பால் தவிக்கின்றனர். மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியிலிருக்கும் போது, ஜம்முவில் சட்டவிரோத ஊடுருவிய ரோஹிங்கியாக்களைக் ஜம்முவில் குடியமர்த்த தீர்வு காண்பதற்கு  நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது,  சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டதால், ஜம்முவில் குடியேறியுள்ள ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் வெளியேற்ற எவ்வித தடையும் கிடையாது.  சட்ட விரோத ஊடுருவலை தடுக்க கோரியதற்கு கிடைத்த பரிசாகும்.

          2016-ல் ஜம்மு பகுதியை சார்ந்த அன்கூர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த பொது நல வழக்கு,  காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் பெருமளவில் இருப்பதால், சிறுபான்மை அந்தஸ்தை நீக்க வேண்டும் , மாநிலத்தில் மொழி மற்றும் மதத்தால் உள்ள சிறுபான்மையினரை வரையறுக்க ஒரு கமிஷன் அமைக்க வேண்டும் வழக்கு தொடுத்தார்.  இந்த வழக்கின் விசாரனையின் போது,  உச்ச நீதிமன்றத்தில், ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்,  தேவை ஏற்பட்டால் சிறுபான்மை கமிஷன் அமைக்கப்படும் என இறுமாப்பாக தெரிவித்தார்கள்.  நாடு முழுவதும் சிறுபான்மையின பட்டியலில் இஸ்லாமியர்கள் இருப்பதால், ஜம்மு காஷ்மீர் அரசும், இஸ்லாமியர்களையே சிறுபான்மையினராக கருதி மத்திய அரசின் நல திட்டங்கள் வழங்கப்படுகின்றன.   2017-ல் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1,33250 பேர்கள் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால்,  இவர்களில் 95 சதவீதமானவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை சார்ந்த சன்னி பிரிவை சார்ந்தவர்கள்.  ஜம்மு மற்றும் லடாக்கில் உள்ள ஷியா பிரிவினருக்கு எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை.

          மத்திய அரசு புதிதாக கல்லூரிகள் துவங்குவதாக இருந்தாலும், அது காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே துவக்கப்படுகிறது.    IIT, AIIMS, IIM போன்ற நிறுவனங்கள் ஜம்மு மற்றும் லடாக்  பகுதிகளில் துவங்கப்படவில்லை.  பலமுறை போராடியும், வருவதை தடுத்து, பள்ளத்தாக்கில் துவங்க முற்படுகிறார்கள்.  இதற்காகவே ஜம்மு மற்றும் லடாக் பகுதியினர்,  அரசியல் ஷரத்து 370 மற்றும் 35 ஏ பிரிவை நீக்க போராடியுள்ளார்கள்.

          ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் புதல்வரும், சிறந்த இந்து சிந்தனைவாதியுமான, காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. டாக்டர் கரன்சிங்  Personally, I donot agree with a blanket condemnation of these developments.  There are several positive points.   Decision will also ensure a fair division of Political Power between  the Jammu and Kashmir regions.  இவ்வாறு  கூறியது முக்கியமானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *