அயோத்தி தீர்ப்பின் அடிப்படையில் கிடைத்த இடத்தில் நூலகமும், மருத்துவமனையும் கட்ட முடிவு

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அதே வேளையில், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஏற்ற வகையில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச அரசு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியின் சோஹவால் பகுதியிலுள்ள தானிபூர்  என்ற கிராமத்தில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு வழங்கியது.இந்த நிலத்தில் மசூதியுடன், மருத்துவமனையும், நூலகமும் கட்டப்படும் என சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.