அயோத்தி சுற்றுலா

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு அயோத்தி நகரை ஆன்மீக சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தூரில் உள்ள ஐ.ஐ.எம். எனப்படும் ‘இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்’ உடன் அயோத்தி நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்தூர் ஐ.ஐ.எம். இயக்குனர் ஹிமான்ஷு ராய் அயோத்தி நகராட்சி கமிஷனர் விஷால் சிங் கையெழுத்திட்டனர்.