அயோத்தியில் ராமர் கோயில் அமைய லட்சம் பலிகள் தந்தோம், லட்சியம் நாளை நம் சொந்தம்!

 

நேற்று

மொகலாய மன்னன் பாபர் 1528 – ல் படையெடுத்து வந்து அயோத்தி இருந்த பகுதிகளைக் கைப்பற்றினான். அவனது தளபதி மீர்பாகி ஸ்ரீராமனின் ஆலயத்தை இடித்து மசூதி கட்ட முயற்சித்தபோது அங்குள்ள ஹிந்துக்கள் எதிர்த்துப் போராடி ஆயிரக்கணக்கானபேர் உயிர் துறந்தார்கள். ஸ்ரீராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டது. ஆனால் அங்கு மசூதிக்கான தொழுகை ஒருபோதும் நடைபெறவில்லை. ஸ்ரீராமஜன்மபூமியை மீட்பதற்காக ஹிந்துக்கள் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள்.

 

 

 

இன்று

அயோத்தி ஸ்ரீராம ஜன்மபூமியில் 1992 டிசம்பர் 6ம் தேதி கரசேவைக்காக லட்சக்கணக்கில் ஹிந்துக்கள் கூடினார்கள். பட்டப்பகலில், ராணுவம், காவல்துறையினர் முன்பாகவே 450 வருட அவமானச் சின்னம் தகர்க்கப்பட்டது. உடனடியாக அங்கு ஸ்ரீராமர் விக்கிரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அன்றாட பூஜைகள் துவங்கின. ஸ்ரீராமஜன்ம பூமியில் ஆலயம் எழுப்பத் தடையாக இருந்த கட்டிடமே தகர்க்கப்பட்டுவிட்ட போதிலும் கடந்த 25 வருஷங்களாக ஹிந்துக்களால் அந்த இடத்தில் ஸ்ரீராமனுடைய கீர்த்திக்கு உகந்த வகையில் ஆலயம் எழுப்ப இயலவில்லை.

 

 

 

நாளை

இதோ… நாளை உதயமாக இருக்கிற ஸ்ரீராமர் ஆலயத்தின் வடிவம் இது. கோயிலுக்குத் தேவையான சிற்பங்களுடன் கூடிய தூண்கள் எல்லாம் தயாராகிவிட்டன. பல ஆண்டுகளாக நடந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் நேர்மையான நல்ல அரசுகள் ஆட்சியில் உள்ளன. ஸ்ரீராமஜன்ம பூமியில் ஆலயம் எவ்வளவு விரைவாக அமைகிறதோ அவ்வளவு விரைவாக நம் தேசத்தின் கௌரவம் உலக அரங்கில் உயரும். நம்முடைய காலக் கட்டத்தில் ஸ்ரீராமஜன்ம பூமியில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடைபெறுவது நமக்கு பாக்கியம்தானே!

 

One thought on “அயோத்தியில் ராமர் கோயில் அமைய லட்சம் பலிகள் தந்தோம், லட்சியம் நாளை நம் சொந்தம்!

  1. ராமரின் தந்தையாரான தசரதன் திருவண்ணாமலை ஆரணியில் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான்.யாகம் நிகழ்த்தியபின் அமிர்பாகத்தை தனது 4 மனைவிகளுக்குத் தந்தானென்று அவ்வாலய தலவரலாறு கூறுகின்றது.ராமர் பிறந்த இடமான சேலம் அ ாேத்தியா பட்டிணத்தில் ராமருக்கு ாே தண்டராமசுவாமி என்று ஆலயமுள்ளது.இவர்கள் வனவாசம்புரிந்த ஊர் வனவாசியென்றும்,சீதைக்கு ஜலம் தேடி கண்டறிந்த ஊர் ஜலகண்டாபுரம் என்றும் ஆயிற்று.சீதை பிறந்த ஊர் நங்கவள்ளியெனவும்,ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த ஊர் தாரமங்கலம் எனவும் ஆயிற்று.தஞ்சையிலுள்ள புள்ளபூதங்குடி வல்வில் ராமன் ஆலயத்தினருகில் ராவணன் சீதையை தனது புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்றான்.ராவணனுக்கும்,மண் ாேதரிக்கும் திருமணம் நிகழ்ந்தது உத்திர ாேசமங்கை சிவன் ஆலயத்தில்.

Comments are closed.