பாரதத்தில் 43.7 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை கண்டறிந்து, நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்க, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ‘இ-ஷ்ரம்’ என்ற இணைய பதிவு முறையை துவங்கி உள்ளது. மத்திய அரசின் அனைத்து பொது சேவை மையங்களிலும், இதற்கான பதிவுகளை செய்யலாம். தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்த பின், பயனாளியருக்கு 12 இலக்க யு.ஏ.என்., வழங்கப்படும். அரசின் சலுகைகள் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக அரசால் வழங்கப்படும். இந்த தரவு தளம், தொழிலாளர்களின் தொழில் திறமையை வகைப்படுத்த, திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். தொழிலாளர்கள் புலம்பெயர நேர்ந்தாலும் யு.ஏ.என் என்ற பிரத்தியேக எண் மூலம் சலுகைகள் கிடைக்கும். இதில் பதிவு செய்ய எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்கள் பதிவேற்றத்தை வரும் டிசம்பர் 31க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.