அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்டது. அதிபர் டிரம்பும், எதிர்கட்சி தலைவர் ஜோபிடனும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. இருவரும் கட்சி, கொள்கை என வேறுபட்டவர்கள். எனினும் இவர்களை இணைப்பது, இவர்கள் வெற்றிபெற தேவைப்படும் புலம்பெயர்ந்த பாரதநாட்டவர்கள், குறிப்பாக ஹிந்துக்களின் ஓட்டுகள்தான். ஹிந்துக்களின் ஓட்டை குறிவைத்து தினமும் இவர்கள் செய்யும் அரசியலும், பிரச்சாரங்களும் உலகையே ஆச்சரியமாக பார்க்க வைக்கின்றன.
ஓட்டுக்களை கவர கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளார் ஜோபிடன். கமலாவும் ‘பாட்டிதான் எனக்கு ரோல் மாடல். தாயின் வார்த்தைகளே உத்வேகம் அளித்தன’ என பேசி வருகிறார். இது ஒருபக்கம் இருக்க ‘மோடி என் நண்பர், இந்தியர்களை என் வம்சமே என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும்’ என உருகுகிறார் டிரம்ப். முதலில் பாரதத்தில் இருந்து வந்தவர்களை பாம்பு பிடிப்பவர்கள் என்றனர். ஹிந்துக்கள் அமைதியாக இருந்தனர். தங்கள் அறிவுத்திறனை காட்டினர், கடுமையாக உழைத்தனர். நாம் யார், நம்மால் என்ன சாதிக்க முடியும் என நிரூபித்தனர். முக்கியமாக ஜாதி, மொழி பேதமில்லாமல் இந்தியர்கள் எனும் ஒற்றை அடையாளத்துடன் ஒன்றிணைந்தனர். இதுவே இன்று அவர்களின் பலமாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு கேட்கும் அளவுக்கு அவர்களை உயர்த்தியுள்ளது.
பாரதத்தை சேர்ந்த ஹிந்துக்களாகிய நாம் ஒன்றிணைந்தால் எதையும் வெல்லலாம், சாதிக்கலாம். உலகின் குருவாக நம் பாரதம் உயர இது ஒன்றே சிறந்த வழி எனும் பாடம் கிடைத்துள்ளது. சிந்திப்போம், செயல்படுவோம்.