செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் டி.ஜி.பி பாஸ்கர் ஜோதி மஹந்தா, “பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் உள்ள ராணுவ பயிற்சி முகாம்களை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றொரு பக்கம் மதரஸா கும்பல்களும் உருவாகி வருகின்றன. பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உதவியுடன் பல்வேறு சிறு சிறு குழுக்கள் உருவாகி வருகின்றன. இந்த குழுக்கள் மூலம் பல்வேறு பயங்கரவாத செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அஸ்ஸாம் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் அண்டை நாடுகளில் சதி செயல்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 34க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே அஸ்ஸாமில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சதிகளை அசாம் காவல்துறை அனுமதிக்காது. சில ராணுவப் பயிற்சி முகாம்கள் வங்கதேசத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.