அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான் – ஐ.நா. சபையில் இந்தியாவின் தக்கபதிலடி

ஐ..நா.பொதுச் சபையின் 74வது கூட்டத்தில் இம்ரான் கான் நிகழ்த்திய உரைக்கு, தக்க பதிலடியாக, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்திரத் தூதரகத்தில் முதன்மைச் செயலராக இருக்கும் திருமதி விதிஷா மைத்ரா கொடுத்ததுள்ளார்.  பயங்கரவாத சங்கிலித் தொடர் தொழிலை ஏக போகமாக நடத்தி வரும் நாட்டின் தலைவராக இருந்தாலும், பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதத்தை நியாயப்படுத்திப் பேசியது, வெட்கமற்றதாகவும், ஆத்திரமூட்டுவதாகவும் இருந்தது.   வெறுப்பூட்டும் சிந்தனை மூலம் பயங்கரவாதத் தொழிலைக் கட்டமைத்தவர்கள், இந்தியர்களுக்காக பேச வேண்டிய அவசியமில்லை.   இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக,  ஐ.நா.வால்  பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 130 பேர்களும் தஞ்சம் புகுந்திருப்பதும், தடை செய்யப்பட்ட 25 பயங்கரவாத அமைப்புகளுக்கும் தாயகம் பாகிஸ்தான்.   அல்-காய்தா மற்றும் ஐ.எஸ்.தடைப்  பட்டியலில் வைத்துள்ள ஒரு நபருக்கு ஓய்வூதியம் அளித்து வரும் ஒரே அரசு பாகிஸ்தான் அரசு.    நாடு விடுதலை பெற்ற போது சிறுபான்மையினரின் எண்ணிக்கை தற்போது பாகிஸ்தானில் குறைந்தது எவ்வாறு என்ற கேள்விகளை எழுப்பினார்.   பாகிஸ்தானால் பதில் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

          இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் ஊற்றுக் கண் பாகிஸ்தான்.  பாகிஸ்தான் ஆட்சியாளர்கள், பயங்கரவாத அமைப்பிற்கு பயிற்சி அளிக்கவும், ஆயுதங்கள் வாங்குவதற்கு நிதி உதவி செய்வது,  1980 ம் ஆண்டு முதல் நேரடியாக அரசே ஈடுபட்டுள்ளது.   பாகிஸ்தான் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இருப்பது, ராணுவமும்,  அந்த ராணுவத்தை கட்டுப்படுத்துவது ஐ.எஸ்.ஐ. என்ற அமைப்பும்.  2005-ம் வருடம் மே மாதம் 2ந் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267-ன் படி அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் 130 பேர்கள், அல்காயிதா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஜி-இ-முகமது, அல் பதார்,  ஹர்கத்-உல்-முஜாஹிதீன், ஹக்கானி நெட் ஒர்க், மில்லி முஸ்லீம் லீக், இஸ்லாமிக் ஜிகாத் யூனியன், ஹர்கத்  – உல்- தஹீர் போன்ற அமைப்புகளை சார்ந்தவர்கள்.  மஜீத், அப்துல் சௌத்திரி, அப்துர் ரஹிமான், முகமது துப்பீல், தாவுத் இப்ரஹிம், அரிப் ஓய்மானி, நசீர் ஜாவத்,  அல்காயிதாவின் தலைவர் ஜவ்ஹாரி, அபீஸ் சையத் போன்றவர்கள்.  இவர்களுக்கு  Fazeel-A-Tul Shaykh Abu Mohammed  Ameen Al-Peshwari என்பவர் அனைத்து உதவிகளை செய்து கொடுப்பதாக அமெரிக்காவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.    இவரும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இருப்பவர்.

          பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு  பயிற்சி, ஆயுதங்கள், நிதி உதவி செய்துள்ளது.  1956லிருந்து   நாகாலாந்தில் National Socialist Council of Nagaland (NSCN) , United Liberation Front of Assam,  National Liberation Front of Tripura  உள்ள பிரிவினைவாத அமைப்புகளும், அஸ்ஸாமில் உள்ள உல்பாவிற்கும் இன்று வரை  உதவிகள் செய்து வரும் நாடு பாகிஸ்தான்.  1990-ல் டாக்காவில் பாகிஸ்தான் தூதரகத்தின் மூலம்      உல்பா தலைவர்கள், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.யுடன் நெருங்கிய தொடர்பிலிருந்துள்ளார்கள்.   1960 லிருந்து 1971 பங்களா தேஷ் உருவாகும் வரை பாகிஸ்தான் நாகா தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வந்துள்ளது.  1991 லிருந்து வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களின் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்கள் குறிப்பாக உல்பா மற்றும நாகா பிரிவினைவாதிகள், பாகிஸ்தானில் பயிற்சி எடுத்து வந்துள்ளார்கள்.  1993-ல் 10 பேர்கள் பயிற்சி எடுத்த எண்ணிக்கை தற்போது 100க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.   மியான்மர் வழியாக தாய்லாந்தில் உள்ள 240க்கம் மேற்பட்ட National Socialist Council of Nagaland பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

          வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு உதவியது போலவே, பஞ்சாப் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசு நிதி உதவி செய்துள்ளது.  ரா வின் தலைமை அதிகாரி திரு. ஆர்.என். காவ்,  பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரியின் பேச்சை இடை மறித்து கேட்ட போது,   Pakistan had dispatched over 1,000 highly trained men from its Special Service Groups into Indian Punjab ……. To aid the mad monk Bhindrawale in his fight against the Indian Governement.  (      Chand Joshi P.24 Jarnail Singh Bhindranwale  )      என  கூறியதை அரசுக்கு குறிப்பாக எழுதி அனுப்பினார்.    பஞ்சாப் பிரிவினைவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை. The West German Intelligence Service 1984-ல்  அனுப்பிய ரகசிய அறிக்கையில பாகிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் குறிப்பாக ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், பஞ்சாப் பிரிவினைவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இதுவும் பாகிஸ்தானின் அடாவடித் தனத்திற்கும், அந்நிய நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு துணை போன வரலாறும் உண்டு என்பதை இம்ரான் கான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தியா குறிப்பிட்டுள்ளது.

          15.8.2019ந் தேதி பாகிஸ்தான் அரசானது, ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய கடிதத்தில்,  லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா வின் பொறுப்பாளரான ஹபீஸ் சையத்தின் முடக்கிய வங்கி கணக்கிலிருந்து, வரவு செலவு செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், முடக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு, செலவு செய்ய அனுமதியளித்தது.   இது மட்டுமல்லாமல், போதை பொருள் உற்பத்தி அதிக அளவில் பயிரிடும் நாடு பாகிஸ்தான்.  சட்டவிரோதமாக போதை பொருள் கடத்துவதின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு, பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படுகிறது.

          டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் சையது தாவுத் ஜிலானி இருவரையும் முதலில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டார்கள், விசாரணையின் முடிவில் இருவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன்  நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜிஹாத்தின்போது, ராணுவம் நேரடியாக போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டிருந்த்து.  நேஷனல் லாஜிஸ்டிகல் செல் (National Logistical Cell)  என்ற டிரக்குகள் நிறுவனம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமானது.  காராச்சியில் வந்திறங்கிய சி.ஐ.ஏ.வினால் வழங்கப்பட்ட ஆயுதங்களை இந்த டிரக்குள் ஏற்றிக்கொள்ளும், இவை பெஷாவர், குவெட்டா போன்ற இடங்களுக்குச் செல்லும், அங்கே ஜிஹாத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கிவிட்டு, அதே டிரக்குள் கராச்சிக்கு திரும்பும்போது, அவை ஹெராயின் மூட்டைகளைச் சுமந்துவரும்.  இவை கராச்சியிலிருந்து உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.  இவ்வாறு பாகிஸ்தான் அமெரிக்காவின் துணையோடு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது.ஜெனரல் ஜியாவுல் ஹக்கின் மரணத்திற்கு பிறகு, போதைப்பொருள்கள் கடத்தலில் அவரின் பங்கு வெளிச்சத்திற்கு வந்தது, ஜியா உல் ஹக் ஆட்சியில் அமைச்சராக இருந்த மியான் முஸஃப்பர் ஷா (Mian Muzaffar Shah) என்பவர் இதைத்தெரிவித்தார்.

         ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான நாடுகளில் உள்ள தீவிரவாதபயங்கரவாத கும்பல்களிடமிருந்து, தற்போது பாகிஸ்தானில்  உள்ள தாவுத் இப்ராஹிமுக்கு பணம் வரும் வழி சற்றே ஆய்வு செய்யவேண்டிய ஒன்றாகும்போதைப்பொருள்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வதிலிருந்து கிடைக்கும் நிதியானது, அல்ஜரௌனி பணபரிமாற்ற வங்கி (al-Zarouni Exchange)  துபாய் பணபரிமாற்ற வங்கி (Dubai Exchange), அல்திர்ஹம் பணபரிமாற்ற வங்கி (al-Dirham Exchange), அலமாஸ் எலெக்டரானிக்ஸ் (Almas Electronics), யுசுப் டிரேடிங் (Yusuf Trading), ரீம் யுசுப் டிரேடிங் (Reem Yusuf Trading), ஃப்லௌதி டிரேடிங் கம்பெனி (Falaudi Trading Company), கல்ப் கோஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் (Gulf Coast Real Estates) போன்ற நிறுவனங்கள்மூலம் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் பரிமாற்றம் செய்யப்படுகிறதுதென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் சுமார் 3.5 மில்லியன் டாலருக்கு இணையான போதைப்பொருள்கள் கடத்தலில்  முக்கியமானவன் தாவுத் இப்ராஹிம்

          எனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.சபையில் இந்தியாவின் மீது வீசிய வன்சொல்லுக்கு பதிலாக இந்தியா தரப்பில் வைத்து வாதத்தால், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல் வெளிச்சத்திற்கு வந்தது.   பல முனைகளில் தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் பாகிஸ்தான், அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *