ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிட்டார். இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் சத்பால் ரைசாடாவை விட 1,78,056 ஓட்டுகள் வித்தியாசத்தில், அனுராக் தாக்கூர் முன்னிலை வகிக்கிறார். இதனால் அனுராக் தாக்கூர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதனால் வெற்றியை கொண்டாடி மகிழ, பா.ஜ., அலுவலகத்திற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இது குறித்து அனுராக் தாக்கூர் நிருபர்கள் சந்திப்பில்,‛‛ ஹமிர்பூர் லோக்சபா தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம். ஹிமாச்சல பிரதேசத்தின் 4 தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்றார்.